தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக இன்று 1,985 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை நேற்றை விட சற்றே குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்றுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது.
இன்று தமிழ்நாட்டில் 1,997 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,69,308 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 196 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக ஐ.ஐ.டி-மெட்ராஸ் குழு ஹைப்பர்லூப் பாட் முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. இதில் சுமார் 70% பாகங்கள் அவர்களே தயாரித்தது...
போலந்திலிருந்து 107 ‘உயிருள்ள சிலந்திகள்’ பார்சல் மூலம் அனுப்பப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இதற்கான காரணம் என்னவென்று விசாரணை நடைபெற்று வருகிறது
சென்னை மருத்துவர்கள் வெளியிட்ட நடன வீடியோவில், முகக்கவசத்தை பயன்படுத்துவது, தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தொற்றுநோய்களின் மூன்றாவது அலை ஏற்படக்கூடிய ஆபத்தை கருத்தில் கொண்டு, மக்கள் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது...
சென்னை மருத்துவர்கள் தொடர்ந்து ஆறு மணிநேர நீண்ட அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோய் நோயாளி ஒருவரைக் காப்பாற்றினார்கள்... சிறுநீரகத்தை அகற்றும் சிகிச்சையையும்,, தொடை எலும்பு மாற்று அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் ஒரே நேரத்தில் செய்தனர்.
ஸ்புட்னிக்-வி கொரோனா வைரஸ் தடுப்பூசியின் செயல்திறன் 91 சதவிகிதம் ஆகும். தமிழகத்திலேயே முதன்முதலில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி போடப்படுகிறது.
மனிதர்களிடம் இருந்து சிங்கத்துக்கு கொரோனா பரவியதா? சாத்தியமே என ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. வெளவாலில் இருந்து கொரோனா தோன்றியதாக முன்பு நம்பப்பட்டது
தடுப்பூசிப் பற்றாக்குறையால் இன்று (2021, ஜூன் 02), 5996 நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போடத் தொடங்கியதில் இருந்து சென்னையில் இன்றுதான் மிகவும் குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்த கிராமத்தில் தடுப்பூசி மட்டும் இலவசமல்ல, அதைப் போட்டுக் கொண்டவர்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், பைக்குகள், ஏன் தங்க நாணயம் கூட கிடைக்கும். ஆச்சரியமாக இருக்கிறதா?
மாநிலத்தில் லாக்டவுன் ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், நாளை சந்தை வழக்கம் போல் இயங்கும் என கோயம்பேடு அங்காடி நிர்வாகக் குழு அறிவித்துள்ளது
துபாயில் இருந்து சென்னை திரும்பிய 8 பயணிகள், தங்கள் உள்ளாடைகள் உட்பட பல விதங்களில் 9 கிலோ தங்கத்தை மறைத்து கொண்டு வந்தது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோவில் மருத்துவ ஆக்ஸிஜனை பொருத்தியுள்ள தொண்டு நிறுவனம் ஒன்று, சென்னை வீடுகளுக்கு சென்று இலவசமாக ஆக்சிஜன் சேவையை வழங்குகிறது. மருத்துமனைகளுக்கு மக்களை இலவசமாக அழைத்துச் செல்கிறது.
வெளிநாட்டில் இருந்து வரும் தபால் பார்சல்கள் வழியாக தங்கக் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மிகப் பெரிய தங்கக் கடத்தல் பிடிபட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.