அதிமுக-வின் அரசியல் ஏடான ‘நமது அம்மா’-வில் சர்ச்சைக்குறிய கட்டுரையை வெளியிட்ட துணை ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் திருமலை ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
அதிமுக-வின் அதிகாரப்பூர்வ ஏடான நமது அம்மா இதழில் "அதிமுக-வும் பாஜக-வும் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படும்" எனும் கட்டுரை வெளியானது. இந்த கட்டுரை குறித்து பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கட்டுரையினை ஒப்புதல் இல்லாமல் பிரசூரித்ததாக நமது அம்மா இதழின் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Columnist Thirumalai & the sub-editor has been sacked from AIADMK's party newspaper "Namathu Amma" after an article hailing the ties between the AIADMK & the BJP & lauding Prime Minister Narendra Modi appeared in the newspaper yesterday.
— ANI (@ANI) April 24, 2018
மேலும் ஒப்புதல் இல்லாமல் இதழில் பிரசூரித்த துணை ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் திருமலை ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேலையில், "கட்டுரை கட்சியின் முடிவு அல்ல; கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அஇஅதிமுக எப்போதும் இல்லை", "பாஜக, அதிமுக கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அதில் பிரசுரமாகும் கட்டுரையோ முடிவு செய்ய முடியாது. வாசகர் கட்டுரையின் பேரில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது போன்ற குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சி. குழப்பங்களுக்கு வித்திடும்வகையில் கட்டுரை ஒப்புதலின்றி பிரசுரமாகியுள்ளது" எனவும் இதழின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது!
பாஜக, அதிமுக கூட்டணியை நமது அம்மா நாளிதழோ, அதில் பிரசுரமாகும் கட்டுரையோ முடிவு செய்ய முடியாது.
வாசகர் கட்டுரையின் பேரில் அதிமுக-பாஜக கூட்டணி என்பது போன்ற குழப்பத்தை உருவாக்க சிலர் முயற்சி. குழப்பங்களுக்கு வித்திடும்வகையில் கட்டுரை ஒப்புதலின்றி பிரசுரமாகியுள்ளது. #AIADMK
— நமது புரட்சித்தலைவி அம்மா (@DrNamadhuAmma) April 24, 2018