’அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' வடலூரில் தைப்பூச ஜோதித் திருவிழா...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தன்மை குடி கொண்டு ஒப்பற்ற ஒளியாய் திகழ்கிறது. அந்த ஒளிப் பிரவாகத்தை, ஆசை, கோபம், தன்னலம். பொய்மை என பல்வேறு பொல்லாத குணங்கள் திரைகளாகப் படர்ந்து, மனிதத் தன்மையை அழுத்தி மறைத்துவிடுகிறது. இந்த தீங்கான குணங்கள் விலகும்போது, மனிதருள் உள்ள தெய்வத்தைக் காணமுடியும். 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 28, 2021, 01:10 AM IST
  • வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபையில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி தரிசன விழா
  • தைப்பூச ஜோதி தரிசனம் விழா முதன்மையான ஒன்றாகும்
  • அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை
’அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை' வடலூரில் தைப்பூச ஜோதித் திருவிழா... title=

வடலூர்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வத்தன்மை குடி கொண்டு ஒப்பற்ற ஒளியாய் திகழ்கிறது. அந்த ஒளிப் பிரவாகத்தை, ஆசை, கோபம், தன்னலம். பொய்மை என பல்வேறு பொல்லாத குணங்கள் திரைகளாகப் படர்ந்து, மனிதத் தன்மையை அழுத்தி மறைத்துவிடுகிறது. இந்த தீங்கான குணங்கள் விலகும்போது, மனிதருள் உள்ள தெய்வத்தைக் காணமுடியும். 

வடலூரில் தைப்பூசத்தன்று திரை விலக்கி ஜோதி தரிசனகாட்சி காண்பது சிறப்பான ஒன்று. இதைக்காண உலகின் பல்வேறு இடங்களிலும் இருந்தும் மக்கள் வந்து குவிவார்கள். வடலூர் சத்திய ஞான சபையில் கருப்பு, நீலம், பச்சை, சிவப்பு, பொன்னிறம், வெண்மை, கலப்பு வண்ணம் என ஏழு வண்ணத் திரைகளை விலக்கி அதன் பின் இருக்கும் ஜோதி தரிசனம் காட்டப்படும். திரைகள் விலகியதும் அனல் பிழம்பாக ஜோதி ஒளிக்காட்சி கண்ணாடியில் பிரதிபலிக்கும். 

அருட்பிரகாச வள்ளலாருக்கு முருகன் கண்ணாடியில் காட்சி கொடுத்தபோது பரவசத்தில் பாடிய பாடல் எது தெரியுமா?

சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும் ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும் அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும் என் கண்ணுற்றதே

Also Read | தைப்பூசத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவில் தேர்த் திருவிழா

தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பவுர்ணமி நாளும் கூடி வரும் நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசத் திருவிழா. இந்த ஆண்டு தைப்பூசம் தமிழர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தில் பல சிறப்புகள் இருந்தாலும், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனம் விழா முக்கியமான விழாவாகும்.  
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்” என்பது தான் வள்ளலார் என்னும் ராமலிங்க அடிகளாரின் விருப்பமாக இருந்தது.

சமய சீர்திருத்தவாதி வள்ளலார், அனைத்து மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை எடுத்துக் கூறினார். இதன் தொடர்ச்சியாக  வள்ளலார் மாற்றுப் பண்பாட்டை முன்வைத்தார். 

அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய சிந்தனைகள் மிகவும் முற்போக்குடையதாக இருந்தன. சாதிய பாகுபாடுகளை சாடினார் ராமலிங்க வள்ளலார். அவரது கோட்பாடு மதங்களுக்கு அப்பாறபட்டு தனித்துவமானது. இறைவனை ஒளி வடிவமாக வழிபடுவதே அவர் காட்டும் வழி. சன்மார்க்க சங்கங்கள் உலகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.

Also Read | அரும்பெருஞ் சோதியை வணங்குவோம்

சமரச சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் கடவுளின் உருவத்தை வழிபடுவதில்லை. ஜோதி வழிபாட்டை பின்பற்றுகின்றனர். எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை உண்ர்த்த ராமலிங்க அடிகளார் சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்ற மார்க்கத்தைத் தோற்றுவித்தார். மக்களின் பசித்துயர் போக்க சத்திய தரும சாலையை 1867ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று வாடிய வள்ளலார் வடலூரில் மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் எரிந்து, பசிப்பிணியை போக்கிக் கொண்டிருக்கிறது. 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜரின் கோவில் தொன்மையானது. சிதம்பரத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது அருட்பிரகாச வள்ளலாரின் வடலூர் சத்திய தரும சாலை. வள்ளலார் பாடிய திருவருட்பா ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பாகும். அவை, ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.

Also Read | அன்னையின் அருளடி பணிவோம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G 

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News