சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமூர்த்தி மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வித்தித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த நேரத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.82.3 லட்சம் சொத்து சேர்த்ததாக சத்தியமூர்த்தி மற்றும் அவரது மனைவி சந்திரா மீது வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. தீர்ப்பில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உறுதி செய்யப்பட்டு சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டும் அவரது மனைவிக்கு 2 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவருக்கும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.