ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு வேறு தந்தையரின் குழந்தை....

அலெக்ஸாண்டிரியா மற்றும் கால்டர் 19 மாத இரட்டை குழந்தைகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த வெவ்வேறு தந்தையின் குழந்தை!!

Last Updated : Feb 25, 2019, 02:55 PM IST
ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இரு வேறு தந்தையரின் குழந்தை.... title=

அலெக்ஸாண்டிரியா மற்றும் கால்டர் 19 மாத இரட்டை குழந்தைகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த வெவ்வேறு தந்தையின் குழந்தை!!

சைமன் மற்றும் கிரெமி பெர்னி-எட்வர்ட்ஸ் என்ற பிரிட்டனை சேர்ந்த இருவரும், குழந்தை பெற்றெடுத்து தந்தையாக மாற வேண்டுமென விரும்பியுள்ளனர். இதையடுத்து, கரு முட்டை வழங்குகின்ற கொடையாளியை கண்டறிய உதவிய நிறுவனம், ஒரே நேரத்தில் ஒரு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளை பெற்றெடுப்பது சாத்தியமே என்று தெரிவித்தது. 

இதையடுத்து, இந்த முயற்சியை செயல்படுத்த இருவரும் வெளிநாடு சென்றனர். "நல்ல வேளையாக, பெயர் தெரியாத ஒருவரின் கரு முட்டையை தானமாக பெற்றோம்" என்று தெரிவிக்கும் சைமன், "லாஸ் வேகாஸில் எங்களின் கருவள சிகிச்சை நடைபெற்றதே இதற்கு காரணமாகும்" என்கிறார். தானமாக பெற்று கொண்ட கரு முட்டைகளை இரண்டு குழுக்களாக பிரித்தனர். பாதி சைமனின் விந்தணுவை கொண்டு கருத்தரிக்க செய்யப்பட்டன. மற்றொரு பாதி கரு முட்டைகள் கிரெமியின் விந்தணுவை பயன்படுத்தி கருத்தரிக்க செய்யப்பட்டன. இந்த கரு முட்டைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டன. அதன் பின்னர் உறைநிலையில் வைக்கப்பட்டன.

இந்த இரண்டு பகுதிகளிலும் கருத்தரித்த கருவில் இருந்து, மிகவும் வலிமையான ஒவ்வொன்றை எடுத்து கனடா நாட்டை சோந்த வாடகை தாயின் கருப்பையில் வைத்து மருத்துவர்கள் வளர செய்தனர். கனடா வாடகை தாய் இவ்வாறு, கருத்தரித்த இரண்டு கரு முட்டைகளும் ஒரே தாயின் கருப்பையில் வளர்ந்தன. ஆனால், அவை இரண்டுக்கும் வெவ்வேறு தந்தையர்.

சைமன் மற்றும் கிரெமிக்கு வாடகை தாயாக இருந்து மகபேற்றுக்கு ஒப்புக்கொண்ட கனடா நாட்டை சேர்ந்த மென் ஸ்டோன் என்பவரின் கருப்பையில் இந்த இரு கருக்களும் வளர்ந்தன."நாங்கள் இந்த நாட்டின் சட்ட கட்டமைப்பை விரும்பியதால், கனடா நாட்டை தேர்ந்தெடுத்தோம். பிரிட்டனிலுள்ள நிலைமையை போன்றுதான் இங்குள்ளது. பொதுநலம் மிக்கது. வணிகமானதாக இது இல்லை" என்று சைமன் தெரிவிக்கிறார். பின்னர், அவர்கள் தங்காளின் நாட்டுக்கு சென்ற இருவரும், மகப்பேற்றை பற்றி தகவல் அறிந்து வந்த சைமனும், கிரெமியும், குழந்தைகள் பிறப்பதற்கு ஆறு வாரங்களுக்கு முன்னர் மீண்டும் கனடாவுக்கு சென்றனர். 

கரு முட்டையை தானமாக கொடுத்தவரிடம் குழந்தைகள் இணைய முடியாது என்பதால், வாடகை தாயோடு நல்லுறவை பராமரித்து கொள்வதில் இந்த இரு தந்தையரும் மிகவும் உறுதியாக இருந்தனர். 

 

Trending News