நீண்ட நாட்களாக உலக மக்களின் மனதை நெருடி வந்த கேள்விக்கான பதில் தற்போது ஒரு விஞ்ஞானி மூலம் கிடைத்துள்ளது!
அப்படி என்ன கேள்வி? முட்டை - சைவமா? இல்லை அசைவமா? என்பது தான். இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி, முட்டைகள் சைவ குனத்தையே அதிகளவில் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஆனால், கோழிகளில் இருந்து இந்த முட்டை வருவதால் உயிருள்ள ஜீவன்களில் முட்டை இணைகிறது எனவே முட்டைகள் அசைவம் தான் என பலர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
எது தான் உன்மை?
முட்டைகள் பொதுவாக 3 பாகங்களாக பிரிக்கப்படுகிறது, முட்டையின் மஞ்சள் கரு, முட்டை வெள்ளை பகுதி மற்றும் முட்டை ஓடு. இதில் முட்டையின் வெள்ளைப்பகுதி புரதத்தினை மட்டும் கொண்டுள்ளது. மஞ்சல்கரு புரதம் மற்றும் கொழுப்பு சக்தியினை கொண்டுள்ளது.
நாம் தினமும் உட்கொள்ளும் முட்டைகளில் பெரும்பாலும் கருக்கல் இருப்பதில்லை. அதாவது நாம் சாப்பிடும் தருவாயில் முட்டைகள் உயிர் கருக்களை கொண்டிருப்பதில்லை.
என்னதான் உயிருள்ள ஜீவன்களான பறவைகள் மூலம் நாம் முட்டைகளைப் பெற்றாலும், ஒரு பறவையின் உயிரினுள் உருவாகும் கருவானது முழுமாக உருபெற 6 மாதம் வரை எடுக்கின்றது. அவ்வாறு உருபெறாத முட்டைகளையே நாம் கழிக்கின்றோம்.
இந்த முட்டைகள் முழுமையற்ற முட்டைகள் என்று அழைக்கப்படுகின்றன. உள்ளூர் சந்தையிலிருந்து நாம் வாங்கும் இத்தகு முட்டைகள் பெரும்பாலும் அசைக்க முடியாத இருக்கத்தினை கொண்டவை. இத்தகு முட்டைகள் எந்த வகையினில் அசைவத்தில் சேரும் என விஞ்ஞானிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்போது நீங்கள் கூறுங்கள். முட்டை - சைவமா? இல்லை அசைவமா?