Simple Home Remedies for Cough: பருவநிலை மாற்றம், மழைக்காலம் போன்ற சமயங்களில் தொற்று நோய்களுக்கு பஞ்சமில்லை. எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும், ஜலதோஷம் சளி இருமல் போன்றவற்றிலிருந்து அவ்வளவு எளிதாக தப்பிக்க முடியாது. அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு இருமல் பிரச்சனை வாட்டி வதைக்க தொடங்கும். சில சமயங்களில் அது காய்ச்சலை ஏற்படுத்துவதோடு, மூச்சு விடுவதில் சிரமத்தையும் ஏற்படுத்தலாம். இதை குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்.
சளி - இருமல், ஜலதோஷம் ஆகியவை பெரிய வியாதி இல்லை என்றாலும் நம்மை பாடாய் படுத்தி விடும். இயல்பாக இருக்க முடியாமல், அன்றாட பணிகள் பலவும் பாதிக்கும். இதற்கு மருந்துகள் கை கொடுக்கும் என்றாலும், முடிந்த அளவு இயற்கை வைத்தியத்தை கடைபிடிப்பதால், பக்க விளைவுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்நிலையில் இருமலைப் போக்க உதவும் சில எளிமையான வீட்டு வைத்தியங்களை (Home Remedies) பற்றி அறிந்து கொள்ளலாம்.
உப்பு கலந்த வெதுவெதுப்பான நீர் இருமலை குணப்படுத்த உதவும்
வெதுவெதுப்பான நீரை அருந்துவதால், இருமல் குணமாவதோடு, இருமலால் ஏற்படும் தொண்டை வலியில் மிகவும் இதமாக இருக்கும். அதோடு உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிப்பதால், தொற்று குணமாகி நிவாரணம் கிடைக்கும்.
இருமலுக்கு அருமருந்தாகும் மஞ்சள்
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. பல வகைகளில் ஆரோக்கிய நன்மைகளில் அள்ளி வழங்கும் மஞ்சளை, சூடான பாலில் கலந்து அருந்தி வந்தால் இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதிலும் அதில் சிறிது மிளகுப் பொடி சேர்த்தால், மிகுந்த நன்மை கொடுக்கும்.
இருமலைப் போக்க உதவும் இஞ்சி
இருமலைப் போக்க, இஞ்சி அருமருந்தாக செயல்படும். ஆயுர்வேதத்தில் இருமல் சளி தொடர்பான பிரச்சனைக்கு முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் இஞ்சியும் ஒன்று. இஞ்சி சாற்றில் தேன் கலந்து சாப்பிட இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதோடு, இஞ்சி கலந்த பிளாக் டீ அருந்துவதும் பலன் கொடுக்கும்.
இருமலுக்கு தீர்வை அளிக்கும் தேன்
தேன் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இதில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள், இருமலில் இருந்து உடனடி நிவாரத்தை கொடுக்கும். வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து அருந்தலாம்.
இருமலுக்கு அருமருந்தாகும் அதிமதுரம்
அதிமதுரம் என்னும் மூலிகை, இருமலுக்கு அருமருந்தாக வேலை செய்யும். எளிதாக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் என்பதால், வாங்குவதிலும் சிரமம் இருக்காது. சிறிது அதிமதுர வேரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, சிறிது தேன் கலந்து பருகினால், இருமல் மட்டுமல்லாது இடைவிடாத இருமலால் ஏற்பட்டுள்ள தொண்டை புண்ணும் குணமாகும்.
கரு மிளகு டீ
எண்ணற்ற மருத்துவ பண்புகளைக் கொண்ட கரு மிளகு, சளி இருமலைப் போக்கும் ஆற்றல் கொண்டது. ஒரு கப் வெந்நீரில் கரு மிளகு பொடி சிறிதளவு சேர்த்து, 15 நிமிடங்களுக்குப் பிறகு, அதில் சிறிது தேன் சேர்த்து அருந்தலாம். கருமிளகு தேன் இரண்டிற்குமே, இருமலை போக்கும் ஆற்றல் உண்டு.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ