இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!!

Health Benefits of Coconut Water: உடனடி புத்துணர்ச்சியை அளிக்கவல்ல பானங்களில் இளநீருக்கு முதன்மையான இடம் உள்ளது. உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை உடனடியாக இது தீர்த்து வைக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 24, 2024, 02:18 PM IST
  • உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் இளநீர் உட்கொள்ளலாம்.
  • இதனால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது.
  • கொலஸ்ட்ரால் அளவு குறைந்தால் இரத்த அழுத்தம் மெதுவாக கட்டுப்படுத்தப்படுகிறது.
இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!! title=

Health Benefits of Coconut Water: மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல் மிகவும் அவசியமாகும். நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல வகையான இயற்கையான உணவுகள் நமக்கு உதவியாக இருக்கும். நாம் தினந்தோறும் உட்கொள்ளும் உணவுகள், பருகும் பானங்கள் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை பெறுகிறோம். அப்படிப்பட்டவற்றில் ஒன்றுதான் இளநீர். பலவித ஆரோக்கிய நன்மைகளின் பொக்கிஷமாக உள்ள இளநீர் நமது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு உறுதுணையாக உள்ளது என்பதை இந்த பதிவில் காணலாம். 

இளநீர்

இளநீர் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். உடனடி புத்துணர்ச்சியை அளிக்கவல்ல பானங்களில் இளநீருக்கு முதன்மையான இடம் உள்ளது. உடலில் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை உடனடியாக இது தீர்த்து வைக்கிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இல்லாமல் அனைத்து இடங்களிலும் இதற்கான ரசிகர்கள் அதிகமாகவே உள்ளனர்.

இளநீரின் நன்மைகள்

இளநீர் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். எனினும் இதன் முழுமையான ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இதனால் உடலுக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தியாவின் பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வத்ஸ், இளநீரின் மகத்துவம் பற்றியும் இதனால் எந்தெந்த நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்பதை பற்றியும் கூறியுள்ளார். அதை இந்த பதிவில் காணலாம்.

இளநீர் இந்த பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும்

உடல் பருமன் (Obesity)

தொப்பை கொழுப்பு (Belly Fat), அதிக எடை, உடல் பருமன் ஆகியவற்றை ஒரு நோயாக கருத முடியாது. ஆனால் இவை பல நோய்கள் உருவாக காரணமாகின்றன. ஆகையால் இவற்றை உடனடியாக சரி செய்வதும் மிக அவசியமாகும். தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்க (Weight Loss) இளநீர் உதவியாக இருக்கும். தினமும் இளநீரை உட்கொள்வதால் தேவையற்ற பசி குறைவதுடன் உடலும் நீரேற்றமாக இருக்கும். இதனால் நாம் ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை உட்கொள்வது குறைகிறது.

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!

உயர் இரத்த அழுத்தம் (High Blood Pressure)

உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தினமும் இளநீர் உட்கொள்ளலாம். இதனால் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு குறைகிறது. கொலஸ்ட்ரால் அளவு குறைந்தால் இரத்த அழுத்தம் மெதுவாக கட்டுப்படுத்தப்படுகிறது. ஆகையால் உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இயற்கையான பானமான இளநீர் மிக உதவியாக இருக்கும்.

இதய பிரச்சினைகள் (Heart Diseases)

இதய கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதய நோயாளிகள் தினமும் இளநீர் குடிக்கலாம். இதனால் மாரடைப்பு, பக்கவாதம், கொரோனரி ஆர்டரி நோய்கள் ஆகியவற்றின் ஆபத்து குறைகின்றது. 

தொற்றிலிருந்து பாதுகாக்கும் (Infections)

கொரோனா பெருந்தோற்று உலகை ஆட்கொண்டது முதல் தொற்றுகளிலிருந்து உடலை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற பதற்றமும் அக்கறையும் மக்களுக்கு அதிகரித்துள்ளது. இதனால் தொற்றில் இருந்து பாதுகாத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளை மக்கள் அதிகம் உட்கொள்கிறார்கள். தினமும் இளநீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் தொற்றுகள் மற்றும் பிற நோய்களிலிருந்து உடலால் எளிதாக போராட முடியும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் நோயாளிகளுக்கு சுகமளிக்கும் இலைகள்: டாக்டரே பரிந்துரைத்த வைத்தியம்... சாப்பிட்டு பாருங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News