Corona News: கொசுக்களால் பரவாது கொரோனா! மழைக்காலத்தில் ஒரு நற்செய்தி!!

கொசுக்கள் வைரஸைப் பரப்ப முடியாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், இந்த கோட்பாட்டை ஆதரிக்கும் உறுதியான தரவுகளை மற்றொரு ஆய்வு வழங்குகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 20, 2020, 01:16 PM IST
  • புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19 வைரஸை கொசுக்களால் மக்களுக்கு மத்தியில் பரப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
  • கொசுக்கள் வைரஸைப் பரப்ப முடியாது என்று WHO ஏற்கனவே திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
  • மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், கொசுக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
Corona News: கொசுக்களால் பரவாது கொரோனா! மழைக்காலத்தில் ஒரு நற்செய்தி!! title=

கொரோனா வைரசை கொசுக்கள் பரப்புமா? அவை ஒரு மனிதனிலிருந்து மற்றொரு மனிதனுக்கு கொரோனாவை கொண்டு செல்லுமா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒரு புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19 வைரஸை கொசுக்களால் மக்களுக்கு மத்தியில் பரப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

"கொசுக்கள் (Mosquitoes) வைரஸைப் பரப்ப முடியாது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) திட்டவட்டமாகக் கூறியுள்ள நிலையில், கோட்பாட்டை ஆதரிக்கும் உறுதியான தரவுகளை எங்கள் ஆய்வு வழங்குகிறது" என்று அமெரிக்காவின் கன்சாஸ் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹிக்ஸ் கூறினார்.

இந்த ஆய்விற்கு, Aedes Aegypti, Albopictus மற்றும் Culex quinquefasciatus ஆகிய கொசுக்கள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், இந்த மூன்று வகை கொசுக்களும் கொரோனா வைரஸ் தோன்றிய நாடான சீனாவில் உள்ள கொசு வகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான மற்றும் பரவலாக சூழல்களில் இந்த கொசுக்களால் தொற்றை பரப்பி, பிரதிபலிக்க முடியவில்லை. எனவே மனிதர்களுக்கு இந்த கொசுக்கள் மூலம் வைரஸ் பரவ வாய்ப்பில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ: AIIMS தில்லியில் COVID-19 தடுப்பு மருந்து COVAXIN மனித பரிசோதனை தொடங்குகிறது..!!!

இதற்கிடையில், கொசுக்கள் மட்டுமின்றி மற்ற மிருகங்கள் மூலமும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு இடையில் பரவ வாய்ப்புள்ளதா என்பதைப் பற்றிய ஆய்வுகளை பல உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், கொசுக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட தருணத்தில், கொரோனா தொற்று (Corona Virus) கொசுக்கள் மூலம் பரவ வாய்ப்பில்லை என்ற செய்தி ஒரு நல்ல செய்தியாக வந்துள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  

ALSO READ: COVID-19 தோற்றுக்கான புதிய அறிகுறி அறிவிப்பு... நீளும் Symptoms பட்டியல்...

Trending News