Corona தொற்றுநோயை ஒழிப்பது தொடர்பான நடவடிக்கையில் ஒரு முக்கிய முன்னேற்றம். AIIMS மருத்துவமனையின் நெறிமுறை கமிட்டி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட COVAXIN என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதனை செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. பரிசோதனையில் ஈடுபட விரும்பும் தன்னார்வலர்கள் திங்கட்கிழமை முதல் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
COVID-19 தடுப்பு மருந்துக்கான முதல்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடத்துவதற்காக மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சில் (ICMR) தேர்ந்தெடுத்த 12 இடங்களில் டெல்லி ஒன்றாகும்.
பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர் எந்த விதமான உடல் பாதிப்பு அல்லது நோய் இல்லாதவராகவும், கோவிட்-19 தொற்று ஏற்படாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் பரிசோதனையில் பங்கேற்கும் நபர் 18 வயதிலிருந்து 55 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என எய்ம்ஸ் பேராசிரியர் டாக்டர் சஞ்சய் ராய் தெரிவித்தார்.
ALSO READ | Facebook: கொரோனா வதந்தியின் உண்மை முகம்... தோலுரித்து காட்ட தனிப்பக்கம்..!!!
தடுப்பு மருந்து பரிசோதனையில் ஈடுபடும் நபருக்கு திங்கட்கிழமை முதல் உடல் நல பரிசோதனை நடத்தப்படும் என்ற அவர், பரிசோதனையில் பங்கேற்க விரும்பும் நபர்கள் என்ற Ctaiims.covid19@gmail.com என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பலாம் அல்லது 7428847499 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். மேலும் எய்ம்ஸின் வலைதளத்தில், இதற்கான தொடர்பு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
Covid-19 தடுப்பு மருந்தை ICMR மற்றும் National Institute of Virology ஆகியவற்றுடன் இணைந்து ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் (Bharat Biotech) தயாரித்துள்ளது.
இந்தியா உருவாக்கிய முதல் உள்நாட்டு தடுப்பூசி இதுதான் என்பதைக் குறிப்பிட்ட ICMR தலைமை இயகுநர் டாக்டர் பல்ராம் பார்கவா, இந்த பரிசோதனைக்கு உயர் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், அரசு உயர் மட்ட அளவில் இந்த பரிசோதனையை கண்காணிக்கும் எனவும் கூறினார்.
AIIMS பாட்னா மற்றும் வேறு சில இடங்களில் பரிசோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. DCGI இரண்டு தடுப்பூசிகளை மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதித்துள்ளது - ஒன்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உருவாக்கியது, மற்றொன்று Zydas Cadila Healthcare Ltd தயாரித்துள்ள தடுப்பு மருந்து.
ALSO READ | வீடு தேடி வரும் மருத்துவமனை… கொரோனாவிற்கு ஆப்பு வைக்கும் IIT …!!!
இந்த இரண்டு தடுப்பூசிகளில் உள்ள நச்சுத் தனமை தொடர்பான ஆய்வு, எலிகள் மற்றும் முயல்களில் வெற்றிகரமான பரிசோதிக்கப்பட்டு, இதன் விபரங்கள் DCGI-இடம் சமர்பிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து இந்த மாத தொடக்கத்தில் இரண்டு மருந்துகளையும் மனிதர்கள் மீது பரிசோதித்து பார்க்க அனுமதி கிடைத்தது என்றும் பார்கவா தெரிவித்தார்.
உலகின் தடுப்பூசி தயாரிக்கும் மிகப்பெரியநாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பு மருந்தை பரிசோதனையை செயல்முறையை விரைவாக மேற்கொள்வது நமது நாட்டின் தார்மீக பொறுப்பு என்று பார்கவா கூறினார்.