பலரது வீடுகளில் இரவில் சாப்பிட்டு முடித்ததும் மீதமாகும் உணவுகளை மறுநாள் பயன்படுத்தும் பழக்கம் இருக்கிறது. மறுநாள் பயன்படுத்தும்போது அந்த உணவை சூடுபடுத்தி சாப்பிடுவார்கள். அது முதல்நாள் சாப்பிட்டதைவிட சுவையாக இருப்பதாக நினைப்பதால் பலர் இந்த பழக்கத்திற்குள் இருக்கின்றனர். ஆனால் சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கோழி இறைச்சி:
சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத உணவு வகைகளில் கோழி இறைச்சி முக்கியமான ஒன்றாகும். சமைத்த கோழி இறைச்சியில் சால்மோனெல்லா பாக்டீரியா பெருக தொடங்கும். அதனால் இறைச்சியை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. சூடுபடுத்தி சாப்பிடவும் கூடாது. சமைத்த உடனே சாப்பிட்டுவிட வேண்டும்.
எண்ணெய் பலகாரங்கள்:
எண்ணெய்யில் தயார் செய்த பலகாரங்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் சூடுபடுத்தும்போது பலகாரங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும். மேலும் எண்ணெய்யை மீண்டும் சூடேற்றும்போது அது நச்சு நீராவியை வெளியிடும். அதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.
கடல் உணவுகள்:
இறைச்சியைப் போலவே கடல் உணவுகளையும் சமைத்தவுடன் சாப்பிட வேண்டும். அதிகபட்சமாக அதனை ஒரு மணி நேரத்திற்குள்ளாவது சாப்பிட்டுவிட வேண்டும். நேரம் ஆக ஆக கடல் உணவில் விஷத்தன்மை ஏற்படக்கூடும். அதனால் மீண்டும் சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது.
முட்டை:
சில நிமிடங்களில் வெந்துவிடும். இருப்பினும் முட்டையில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களையும் கொல்வதற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. வேகவைத்த முட்டையை அறையின் வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும்போது அதில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் பெருக தொடங்கிவிடும். அதனால் முட்டையை சமைத்த உடனே சாப்பிடுவதுதான் நல்லது.
பீட்ரூட்:
நைட்ரிக் ஆக்ஸைடு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். அதனை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரேட்டுகள் நைட்ரோசமைகளாக மாறி உடலுக்கு கேடுவிளைவிக்கும். பீட்ரூட்டை தொடர்ந்து சூடுபடுத்தி சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம் என்று எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள்.
உருளை கிழங்கு:
சமைத்த உருளைக்கிழங்கு குளிர்ச்சி அடையும்போது அதில் குளோஸ்டிரிடியம் போட்டுலிசம் எனும் பாக்டீரியா உருவாகிறது. அது உடல்நலக்கோளாறுக்கு வித்திடும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை: மாரடைப்பு வருவதற்கான '5' முக்கிய அறிகுறிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ