மனிதனுக்கு உரிய அத்தியாவசியங்களிலேயே உணவு மிகவும் முக்கியமாகும். ஆனால் பலர் உணவு உண்ணும்போது அதற்குரிய மதிப்பை கொடுப்பதில்லை. உணவில் கவனம் செலுத்தி சாப்பிடாமல் டிவியையோ, மொபைலையோ பார்த்துக்கொண்டு சாப்பிடுகின்றனர். இதனால் பல பிரச்னைகள் உருவாகின்றன.
அப்படி சாப்பிடும்போது கண்களின் பார்வை முழுவதும் திரையின் மீது பதிந்திருப்பதால் உணவின் சுவை மற்றும் வாசனையை நுகராமல் திரையை பார்த்துக்கொண்டே இருந்தால் சாப்பிடும் அளவு தெரியாது. இதனால் வழக்கத்தைவிட அதிகமாகவோ, குறைவாகவோ சாப்பிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
முக்கியமாக நாம் அதிகம் சாப்பிடும்போது அதிகமாக சாப்பிட்டுக்கொண்டிருப்பதாக மூளை சிக்னல் கொடுக்கும். ஆனால் நமது கவனம் முழுவதும் திரையில் இருந்தால் அந்த சிக்னலை நாம் உணர மறக்கலாம்.
மேலும் படிக்க | ஆண்மையை அதிகரிக்கும் உலர் திராட்சை; இத்தனை நன்மைகளா
அதேபோல் திரையில் கவனம் செலுத்தி சாப்பிடும்போது ஒழுங்காக மெல்லாமல் அப்படியே விழுங்குவதால் செரிமான பிரச்னை, வயிற்று உப்புச பிரச்னைக்கு வழிவகுக்கும்.
மேலும், டிவி பார்த்துக்கொண்டே சாப்பிட்டால் முழுமையாக சாப்பிட்ட திருப்தியும் கிடைக்காது. இதனால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் பசி எடுக்கும். இதனால் உடல் எடை அதிகரிக்கும்.
எப்படி சாப்பிட்டால் நல்லது?
எத்தகைய உணவுகளை உட்கொண்டாலும் நன்றாக மென்று சாப்பிடும் வழக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அந்த உணவு எத்தகைய பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டது என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அதன் சுவை மற்றும் நறுமணத்தை நுகர்ந்து உணர வேண்டும்.
மேலும் படிக்க | யூரிக் அமிலம் திடீரென அதிகரிப்பதால் பிரச்சனையா: இந்த வீட்டு வைத்தியங்கள் உதவும்
நீங்கள் வயிற்றுக்கு போதுமான அளவு சாப்பிட்டுவிட்டீர்கள் என்ற சிக்னல் கிடைக்க சுமார் 20 நிமிடங்கள் ஆகும் என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. அதற்கேற்ப உணவை நன்றாக மென்று மெதுவாக சாப்பிடும்போது சிக்னல் கிடைப்பதற்கான போதிய மூளைக்கு கிடைக்கும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் இந்த வெள்ளைப் பொருளை சாப்பிட்டால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR