கொழுப்பு கரையணும்... தொப்பை குறையணும்: அதுக்கு இதை செய்யணும்.. ரொம்ப சிம்பிள்.. செஞ்சி பாருங்க!!

Weight Loss Habits: தொப்பை கொழுப்பைக் குறைத்து உடல் எடையை குறைக்கும் சில எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன. இவற்றில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2023, 12:51 PM IST
  • ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஒரு பழமாவது உட்கொள்ள வேண்டும்.
  • உணவில் புரதச்சத்தை சேர்க்கவும்.
  • நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள்.
கொழுப்பு கரையணும்... தொப்பை குறையணும்: அதுக்கு இதை செய்யணும்.. ரொம்ப சிம்பிள்.. செஞ்சி பாருங்க!!  title=

எடை இழப்பு குறிப்புகள்:  நம்மில் பலர் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்படுகிறோம். உடல் எடையை குறைக்க பல வித முயற்சிகளை மேற்கொள்கிறோம். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும் அவ்வளவு முக்கியம்தான். அதிகரித்து வரும் எடையைக் குறைக்க நம்மில் பலர் மிகவும் கடினமாக முயற்சி செய்கிறோம். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தாலும், விரும்பிய பலனை அடைய முடிவதில்லை. எனினும், உடற்பயிற்சியுடன் சில இயற்கையான வழிகளின் மூலமும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அப்படி ஒரு இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.

உடல் எடை அதிகரிப்பால் பல உடல் நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதன் காரணமாக உடல் பருமனாக இருக்கும் ஒருவர் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார். பலர் பருமன் காரணமாக சமூகத்தில் அனைவருடனும் நன்றாக பழக முடியாமல் சங்கோஜத்தில் இருக்கின்றனர். ஜிம் போவது, உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை பலரால் மேற்கொள்ள முடிவதில்லை. ஆனால், இவற்றால்தான் உடல் எடை குறையும் என்பதும் அல்ல. பல எளிய இயற்கையான வழிகளின் மூலமாகவும் உடல் எடையை குறைக்கலாம். 

தொப்பை கொழுப்பைக் குறைத்து உடல் எடையை குறைக்கும் சில எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன. இவற்றில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அந்த வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

வாக்கிங் செல்லத் தொடங்குங்கள் 

வாகிங், அதாவது நடைபயிற்சி உடல் எடையை குறைப்பதில் மிக முக்கியமான ஒரு வழிமுறையாகும். வாக்கிங் செய்தால் அப்படி என்ன நடந்துவிடப் போகிறது என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், நீங்கள் நடந்தால், உங்கள் உடலுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்கும். நடைப்பயிற்சி பல மடங்கு கொழுப்பை குறைக்கும். தினமும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம், உடல் வடிவம் பெற ஆரம்பித்து, உடலின் கூடுதல் எடை குறைய ஆரம்பிக்கும். ஆகையால் தினமும் நடப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். 

வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது

வெதுவெதுப்பான அல்லது மிதமான சூட்டில் உள்ள நீரைக் குடிப்பது வயிற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், எந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது வெகு சிலருக்கே தெரியும். எதையாவது சாப்பிட்டு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரை குடித்தால், அதன் விளைவு வயிற்றில் வேகமாக தெரியும்.

மேலும் படிக்க | உங்கள் பற்கள் மஞ்சளா இருக்கா? அப்போ இதை உடனே செய்து பாருங்கள்

நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுங்கள் 

உணவில் நார்ச்சத்தின் அளவை அதிகரிக்கலாம். நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பொருட்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் வைத்திருக்கும். இது உணவு உட்கொள்ளலைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.

ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஒரு பழமாவது உட்கொள்ள வேண்டும் 

ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சில பருவகால பழங்களை சாப்பிட முயற்சி செய்யுங்கள். ஆப்பிள், கொய்யா மற்றும் பேரிக்காய் ஆண்டு முழுவதும் கிடைக்கும். மேலும் இந்த பழங்கள் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகவும் இருக்கின்றன. பழங்களை காலை 11 மணி மற்றும் மாலை 4 முதல் 5 மணி வரை சாப்பிடலாம்.

உணவில் புரதச்சத்தை சேர்க்கவும்

கொழுப்பைக் குறைப்பதில் புரதம் பயனுள்ளதாக இருக்கும். இதனால், உடலுக்கும் அதிக சக்தி கிடைப்பதுடன், தசைகளுக்கு வலிமையும் கிடைக்கிறது. இதற்கு முட்டை, பால், உலர் பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

போதுமான அளவு உறக்கம்

பெரும்பாலும் ஒரு நபர் உடல் எடையை குறைக்க அனைத்து முயற்சிகளையும் செய்கிறார். ஆனால் எடை குறைவதில்லை. இதற்கு போதுமான உறக்கம் இல்லாதது ஒரு காரணமாக இருக்கலாம். கண்டிப்பாக தினமும் அனைவரும் போதுமான அளவு தூங்க வேண்டும். உறக்கம் முழுமையடையாத நிலையில், அதன் தாக்கம் உடல் ஆரோக்கியத்தில் நன்றாகத் தெரியும். தூக்கமின்மை எடை அதிகரிப்பிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. 

மேலும் படிக்க | 40+ பெண்களுக்கான எச்சரிக்கை... மாரடைப்பின் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News