நம் உடலில் உள்ள உறுப்புகளில் அதிகம் வேலை செய்யும் உறுப்பு கல்லீரல் தான். இது நமது உடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை நீக்கும் சுத்திகரிப்பு ஃபேக்ட்ரி போல் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடல் கிரகித்துக் கொள்ள உதவுவதும் கல்லீரலின் வேலை தான். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், உடல் உழைப்பு இல்லா நிலை போன்ற காரணங்களால் கல்லீரல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது
கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் உணவு பழக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. தவறான உணவு பழக்கம் காரணமாக கொழுப்பு கல்லீரலில் சேர்ந்து, அதனால் கல்லீரல் செயல்பாடு பாதிக்கப்பட ஆரம்பிக்கும். இதனை கொழுப்பு கல்லீரல் (Fatty Liver) என கூறுவார்கள். பாதிக்கப்பட்ட கல்லீரல் காரணமாக ஏற்படும் நோய்கள் கணக்கில் அடங்காதவை. இதனை கவனிக்காமல் அலட்சியம் செய்தால், கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற கடுமையான பிரச்சனைகள் (Health Tips) ஏற்படலாம்.
அதிக இனிப்பு மற்றும் சர்க்கரை சாப்பிடும் பழக்கம்
அளவிற்கு அதிகமாக சர்க்கரை அல்லது இனிப்புகளை சாப்பிடுவது கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் அதிகப்படியான சர்க்கரை, கொழுப்பாக கல்லீரலில் சேர்கிறது. எனவே, அதிக அளவில் சர்க்கரை சேர்த்து கொள்வது ஆபத்து. அதிக அளவிலான இனிப்புகள், சாக்லேட், பேஸ்ட்ரிகள், கேக், குளிர் பானங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
நேரம் கெட்ட நேரத்தில் சாப்பிடும் பழக்கம்
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே போன்று எப்பொழுது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியம். சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது கலீரல் ஆரோக்க்கியத்தை பாதிக்கும். சிலர் பசி வரும் போது சாப்பிடாமல், டீ அல்லது காபி குடித்து விட்டு, பின்னர் நேரம் கிடைக்கும் போது தாமதமாக உணவு உண்பார்கள். சில சமயம் குறைந்த இடைவெளியில் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனால் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுகிறது. நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து, பிறகு அதிகமாகச் சாப்பிடுவது அல்லது அடிக்கடி சாப்பிடுவது போன்ற பழக்கங்கள், உடல் நலத்திற்கு ஆபத்தாக முடியும்.
மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
ஆரோக்கியமற்ற உணவு பழக்கம்
துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ரெடு டு ஈட் வகை உணவுகளில், அதிக கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. அதோடு, நீண்ட கால கெடாமல் இருக்க அவற்றில் சேர்க்கப்படும் பிரிசர்வேடிவ்கள் மற்றும் ரசாயனங்கள் கல்லீரலை காலி செய்து விடும். அதோடு, இந்த வகை உணவுகளை வழக்கமாக சாப்பிடும் பழக்கத்தை கொண்ட ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கத்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடல் பருமன் கல்லீரலை கடுமையாக சேதப்படுத்துகிறது. எனவே, உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்க, ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பதோடு, உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்.
கல்லீரலை காலி செய்யும் சோம்பல்
பெரும்பாலானோர் உடல் உழைப்பு ஏதும் இல்லாத சோம்பேறித்தனமான வாழ்க்கை வாழ்கின்றனர். இவர்களுடைய இந்தப் பழக்கம் கல்லீரலுக்கு ஆபத்தானது. எனவே, சுறுசுறுப்பாக இருக்கவும், உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளவும். நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உங்களுக்கு முடிந்த பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள். முடிந்த அளவு எஸ்கலேட்டர், லிப்டுக்குப் பதிலாக படிக்கட்டுகளைப் பயன்படுத்துவதும் பலன் தரும்.
கல்லீரலை பாதிக்கும் மது பழக்கம்
கல்லீரலின் மிகப்பெரிய எதிரி மது. மது அருந்துவதால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது கல்லீரல். அதிகமாக மது அருந்துவதால் கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் கூட ஏற்படலாம். எனவே மதுவை தவிர்ப்பது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கொழுப்பு கல்லீரல் பாதிப்பின் சில அறிகுறிகள்
1. அடிக்கடி சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், அது கல்லீரல் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்.
2. கல்லீரல் பாதிப்பின் அறிகுறியில் ஒன்று கைகள் கால்களில் ஏற்படும் வீக்கம் என்பதால், கவனமாக இருப்பது நல்லது.
3. கல்லீரல் பாதிக்கப்பட்டால் பசி எடுக்காது. அதோடு காரணம் இல்லாமல் எடை இழப்பு ஏற்படும்
4. கல்லீரல் பாதிப்பு இருந்தால், செரிமானம் பாதிக்கபபட்டு வாந்தி குமட்டல் அடிக்கடி ஏற்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ