கல்லீரல் கொழுப்பு அலட்சியப்படுத்தாதீங்க..! இதோ இதுதான் அறிகுறிகள்

கல்லீரல் கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால், அவை உணர்த்தும் அறிகுறிகளை புரிந்து கொண்டு மருந்துவரை சந்தித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 12, 2023, 07:10 PM IST
  • கல்லீரலில் கொழுப்பு படிவது கல்லீரல் கொழுப்பு நோய்
  • அதிக எடை கொண்டவர்கள் BMI-ஐ செக் செய்ய வேண்டும்
  • சத்தான உணவுகளை அன்றாட உணவில் சாப்பிட வேண்டும்
கல்லீரல் கொழுப்பு அலட்சியப்படுத்தாதீங்க..! இதோ இதுதான் அறிகுறிகள் title=

கல்லீரலில் கொழுப்பு படிவது கல்லீரல் கொழுப்பு நோய் ஆகும். இதன் அறிகுறிகளும் பெரிதாக தெரியாது. அதனால் இந்த நோயின் அதி தீவிரத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.  இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாமையே காரணம். கொழுப்பு கல்லீரல் பிரச்சனைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்து கொள்ள தவறினால், இது கல்லீரலில் அழற்சியை ஏற்படுத்த கூடும். இந்த நிலையை மருத்துவ ரீதியாக ஸ்டீட்டோஹெபடைடிஸ் (Steatohepatitis) என கூறப்படுகிறது. இது கல்லீரலில் அழற்சி மற்றும் வடுக்களை ஏற்படுத்துகிறது. 

உடல் எடை பிரச்சனை

அதிக உடல் எடையை கொண்டிருப்பது கல்லீரலில் கொழுப்பு படிவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அதிக உடல் எடை கொண்டவர்கள் எடை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி தங்கள் எடையை குறைக்க வேண்டும். தவிர அதிக எடை கொண்டவர்கள் தங்களின் BMI-ஐ அடிக்கடி செக் செய்து கொள்ள வேண்டும். BMI லெவல் 25-க்கு மேல் இருந்தால் Fatty liver உருவாகும் அபாயம் அதிகம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!

நீரிழிவு நோய்

ஃபேட்டி லிவர் பிரச்சனை ஏற்படுவதற்கான அபாயத்தை நீரிழிவு நோய் அதிகரிக்கிறது. டைப் 2 நீரிழிவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களில் குறைந்தது பாதி பேருக்கு நான்-ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் பாதிப்பு உள்ளதாக மயோகிளினிக் கூறுகிறது. நீரிழிவு பாதிப்பில் கூட ஃபேட்டி லிவர் ஒரு பங்கை கொண்டிருக்க கூடும். இரண்டு நிலைகளும் இருக்கும் ஒருவர் தனது டைப் 2 நீரிழிவு பிரச்சனையை சரியாக நிர்வகிக்காவிட்டால், அது ஃபேட்டி லிவர் நோயை மோசமாக்கி விடும்.

மோசமான உணவு பழக்கம்:

கல்லீரலில் கொழுப்பு படிவதற்கான மற்றொரு முக்கிய காரணம் மோசமான உணவு பழக்கம். தாமதமாகச் சாப்பிடுவது, உணவை சாப்பிடாமல் தவிர்ப்பது, 2 வேளை உணவுகளுக்கு இடையே சரியான இடைவெளி இல்லாதது உள்ளிட்ட பழக்கங்கள் கல்லீரலில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி, ஃபேட்டி லிவர் அபாயத்தை அதிகரிக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

கொழுப்பு கல்லீரல் பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், டயட்டில் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை சேர்க்க வேண்டும். வெளியில் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து எண்ணெய், முழு தானியங்கள் மற்றும் பருவகால காய்கறிகள் கொண்ட ஆரோக்கியமான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து சாப்பிட வேண்டும். நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் லெவல் போன்ற பிற ஆபத்து காரணிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். 

மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News