எச்சரிக்கை! இதுதான் கொரோனாவின் 2 புதிய அறிகுறிகள்

Corona New Symptoms: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுகள் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 2, 2022, 09:24 AM IST
எச்சரிக்கை! இதுதான் கொரோனாவின் 2 புதிய அறிகுறிகள் title=

Corona New Symptoms: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுகள் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றன. பிரிட்டனில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

பிரிட்டனில் கொரோனா வேகமாக பரவி வருகிறது
டெய்லி ஸ்டார் வலைத்தளத்தின்படி, பிரிட்டனில் தினசரி ஆயிரக்கணக்கானோர் புதிய கொரோனா வைரஸ் (Coroanvirus) தொற்றால் பதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பிரிட்டனில் கொரோனாவின் புதிய மாறுபாடான Omicron முழு நாட்டையே உலுக்கி வருகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான பலருக்கு எந்த அறிகுறியும் இல்லை. அதே நேரத்தில், சிலருக்கு காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் வாசனை இன்மை, சுவை திறன் இழப்பு ஆகிய அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

ALSO READ | ஒமிக்ரானுக்கு எதிராக மற்றொரு தடுப்பூசி..! ஆய்வில் தகவல்

கொரோனாவின் 2 புதிய அறிகுறிகள் வெளிப்பட்டன
இதற்கிடையில், கொரோனாவின் சில புதிய அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர், அது என்ன்வென்றால் கண்கள் சிவத்தல் அல்லது விரைவான முடி உதிர்தல் ஆகியவை இதில் அடங்கும். Angiotensin-Converting Enzyme 2 (ACE2) எனப்படும் நொதி மூலம் கொரோனா வைரஸ் மக்களின் செல்களுக்குள் நுழைகிறது என்று நம்பப்படுகிறது. இந்த வைரஸ் கண்கள் வழியாகவும் உடலுக்குள் நுழையும் என அஞ்சப்படுகிறது. ACE2 என்சைம் மூலம் கொரோனா உடலைத் தாக்கும் போது, ​​அது சாதாரண வைரஸ் தாக்குதல் என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

வைரஸ் கண்களைத் தாக்கும்
அறிக்கையின்படி, கண்களுக்குள் நுழைந்த பிறகு, கொரோனா வைரஸ் விழித்திரை மற்றும் எபிடெலியல் செல்களைத் தாக்குகிறது. இந்த இரண்டு செல்களும் கண்கள் மற்றும் இமைகளின் பாகங்களை வெண்மையாக்க வேலை செய்கின்றன (கொரோனா புதிய அறிகுறிகள்). கொரோனா வைரஸ் கண்களைத் தாக்கும் போது, ​​கண்கள் சிவப்பது மட்டுமின்றி, வீக்கம், நீர் வடிதல், வலி ​​போன்ற பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்கும் என மருத்துவர்கள் நம்புகின்றனர். தற்போது கொரோனாவின் இந்த புதிய அறிகுறி குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்கன் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி அசோசியேஷன் இந்த அறிகுறி காய்ச்சல் காரணமாகவும் இருக்கலாம் என்று நம்புகிறது.

ALSO READ | Omicron: இதுவரை ஒமிக்ரான் தொற்றில்லாத 11 மாநிலங்கள்..! எவை?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News