யோனித் தொற்று ஏற்பட்டால் இதை சாப்பிடுங்க! உணவே மருந்து

Vaginal Yeast Infection Remedies: பெண்களுக்கு ஏற்படும் தொற்றுகளில் யோனித் தொற்று மிகவும் மோசமானது. அது மேலும் மோசமாகமல் இருக்க சில உணவுகள் உதவுகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 20, 2022, 02:05 PM IST
  • பெண்களுக்கு மட்டுமான உணவுக் குறிப்பு!
  • இது நோய்த்தொற்றை எதிர்க்கும் டயட்
  • ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகள்
யோனித் தொற்று ஏற்பட்டால் இதை சாப்பிடுங்க! உணவே மருந்து title=

புதுடெல்லி: பிறப்புறுப்பு தொற்று பொதுவாக 18-50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு ஏற்படுகிறது. மழைக்காலம் மற்றும் கோடை காலத்தில் அதிகமாக ஏற்படும் யோனித் தொற்று ஏற்படுத்தும் சிரமங்கள் பெண்களுக்கு மட்டுமே புரியும். யோனியில் திரவக் கசிவு,அரிப்பு, எரிச்சல் மற்றும் அசௌகரியம் போன்றவை அடங்கும். அதுபோன்ற சூழ்நிலையில் உணவில் என்ன சேர்க்க வேண்டும் என்பதை தெரிந்துக் கொண்டு அதை பின்பற்றினால் இந்த பிரச்சனை விரைவில் சரியாகிவிடும்.

பெண்களின் அந்தரங்க உறுப்பில் உள்ள புணர்புழையில் ஆரோக்கியமான நுண்ணுயிரிகள் உள்ளன. ஆரோக்கியமான பாக்டீரியாவை விட, ஆரோக்கியமற்ற நுண்ணுயிர் அதிகமாகும்போது பெண்களுக்கு யோனி தொற்று ஏற்படுகிறது. சிறுநீர்க்குழாய் மற்றும் ஆசனவாயில் இருந்து யோனி பாதை அருகாமையில் இருப்பதால், நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

யோனியில் தொற்று இருக்கும்போது, மன அழுத்தம், பிறப்புறுப்பை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது போன்றவை இந்தப் பிரச்சனையை மேலும் அதிகரிக்கச் செய்யும். அதேபோல, இந்த தொற்றால் அவதிப்படும் பெண்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

மும்பை மசினா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர், மகப்பேறு மற்றும் கருவுறுதல் நிபுணர் டாக்டர் திருமதி. மஞ்சர் அல்த்மாஷ் ஷேக், பெண்களின் யோனித் தொற்று தொடர்பான முக்கிய தகவல்களை பகிர்ந்துக் கொள்கிறார்.

மேலும் படிக்க | இவற்றை எவ்வளவு சாப்பிட்டாலும் எடை அதிகமாகாது!

என்ன மாதிரியான டயட் எடுக்க வேண்டும்?
கொழுப்பு நிறைந்த உணவ, BV (Bacterial Vaginosis) மற்றும் கடுமையான BV ஆகியவற்றின் அபாயத்துடன் தொடர்புடையது. உணவில் உள்ள கொழுப்பு புணர்புழையின் pH ஐ அதிகரிக்கலாம், இதனால் BV வாய்ப்புகள் அதிகரிக்கும். குடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நிறைவுற்ற கொழுப்பு குறைக்கும். இது யோனியை நேரடியாகவோ அல்லது குடல் மைக்ரோபயோட்டா மூலமாகவோ பாதிக்கலாம்.

நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள், நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த ஒரு சீரான, ஆரோக்கியமான உணவு, புணர்புழையின் pH மற்றும் மியூகோசல் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவும்.

மேலும் படிக்க | ஆரோக்கியத்திற்கு உகந்த இந்த காய்கறிகளே உடல்நலனுக்கு எதிராகும்

ப்ரீபயாடிக்குகள் நிறைந்த பல்வேறு உணவுகள்: கொழுப்பு இல்லாத பால் பொருட்கள், தயிர், வெங்காயம், பூண்டு மற்றும் சோயாபீன்ஸ் போன்றவற்றை யோனித் தொற்று பாதிக்கப்பட்ட பெண்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

நன்கு சமைத்த கோழி, இறைச்சி அல்லது மீன், புதிய பழங்கள் மற்றும் உலர் பழங்களை உட்கொள்ளலாம். பச்சை இலை காய்கறிகள், கீரை வகைகளை நிறைய சாப்பிடுங்கள்.

பிறப்புறுப்பில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் உணவுகளில் முழு கொழுப்புள்ள பால் பொருட்கள், சீஸ் போன்றவை அடங்கும். எனவே அவை தவிர்க்கப்பட வேண்டும். சரியாகக் கழுவி சுத்தம் செய்யாத பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவலை அடிப்படையாகக் கொண்டவை. இதற்கு Zee News Tamil பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | மலச்சிக்கல் முதல் குடல் எரிச்சல் வரை: குடல் பிரச்சனைகளுக்கு காரணமாகும் மழைக்காலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News