மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்; எச்சரிக்கும் நிபுணர்கள்!

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவதால்,  ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு, புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 6, 2022, 02:41 PM IST
  • முட்டையைப் போலவே, சிக்கனிலும் புரதம் நிறைந்துள்ளது.
  • பொதுவாக அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு.
  • சில உணவை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.
மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ‘சில’ உணவுகள்; எச்சரிக்கும் நிபுணர்கள்! title=

இன்றைய துரிதமான வாழ்க்கையில் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாழ்க்கையை எளிதாக்க்கவும் நாம் பல சுறுக்கு வழிகளை பின்பற்றுகிறோம். நம்மில் பலருக்கு, குறிப்பாக, வேலை செல்லும் பெண்களுக்கு, போதுமான நேரம் இல்லாத காரணத்தினால், ஒரு நாள் முன்னதாகவே திட்டமிட்டு சமைத்து பிரிட்ஜில் வைத்து சேமித்து, பின்னர் சூடுபடுத்தி சாப்பிடும் பழக்கம் உள்ளது. ஆனால், சில உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது, புற்று நோய் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிகின்றனர்.

பழைய உணவை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் விஷயத்தில், மிகவும் கவனம் தேவை. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் குறித்து ஊட்டசத்து நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில்,  சில உணவுகள் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு, பின்னர் சூடாக்கி சாப்பிடுவதால்,  ஊட்டச்சத்து, சுவை ஆகியவற்றை இழப்பதோடு, புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகிறார்.

மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் சில உணவுகள்:

1. கீரை (Spinach)

கீரையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படக் கூடும் என்று டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகிறார். இதனால் புற்றுநோய் வரும் அபாயம் அதிகரிக்கிறது. மீண்டும் சூடாக்கப்பட்ட பிறகு அதில் உள்ள நைட்ரேட்டுகள் வேறு ஒரு பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது.

2. சாதம் (Rice)

பெரும்பாலானோர் இரவின் மீதமுள்ள அரிசியை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். ஆனால், இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு. பழைய சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது என்பது உடல் பெரும் நன்மைகளை தரும். ஆனால்,  பழைய சாதத்தை பிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடாக்குவதன் மூலம், உணவு விஷமாகும். ஆம், அதனால் புட் பாய்சன் ஏற்பட வாய்ப்புள்ளது. அரிசியில் பைசில்லஸ் செரஸ் (bacillus cereus) எனப்படும் பாக்டீரியாக்கள் இருக்கும். அரிசியை சமைக்கும்போது இந்த பாக்டீரியா அழிக்கப்படுகிறது. ஆனால் அரிசி குளிர்ந்தவுடன், இந்த கிருமிகள் மீண்டும் வேகமாக வளர ஆரம்பிக்கும். எனவே ஒரு நபர் அவற்றை மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால், அந்த உணவு விஷமாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!

3.  முட்டை (Eggs)

முட்டைகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் அதிக அளவு புரோட்டீன் காணப்படுகிறது. ஆனால், இதை சமைத்த உடன் பிரெஷ்ஷாக உட்கொள்ள வேண்டும். உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், பொரித்த அல்லது வேகவைத்த முட்டையை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இதன் காரணமாக  வயிற்று வலி உண்டாகலாம் எனவும் கூறுகிறார்.

4. உருளைக்கிழங்கு (Potato)

உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் கூறுகையில், பொதுவாக அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று உருளைக்கிழங்கு. இது சுவையானதாக இருப்பதோடு,  தயாரிக்க எளிது என்பதால் பெரும்பாலானோரின் தேர்வாக உள்ளது. அதை பிரிஜில் வைத்து மீண்டும் சூடாக்கும் போது அதில் அரிய வகை நுண்ணுயிரிகளின் வளர்ச்சி ஏற்படுகிறது. அதை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவது செரிமான அமைப்பில் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

5. சிக்கன்(Chicken)

முட்டையைப் போலவே, சிக்கனிலும் புரதம் நிறைந்துள்ளது. மேலும் சிக்கனை மீண்டும் சுட வைத்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனையும் ஏற்படும். எனவே அதை சூடாக்கிய பிறகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News