சுவையான மற்றும் ஆரோக்கியமான சுக்கு காபி சுவையாக இருப்பது மட்டுமல்லாது பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தமிழ்நாட்டில் பிரபலமான காபி வகைகளில் ஒன்றும்கூட. நீங்கள் ஒரு காபி பிரியராக இருந்து, காலைப் பொழுதை ஒரு கப் காபியுடன் தொடங்கி, மாலை களைப்பையும் காபியுடன் முடிப்பவர் என்றால் உங்களுக்கு சுக்கு காபி சரியான தேர்வு. ஆம், சுக்கு காபி மற்றும் இஞ்சி டீ ஆகியவை ஏலக்காய், கருப்பு மிளகு, கொத்தமல்லி எல்லாம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான காபி சுவையுடன் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த சுக்கு காபியை குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்று பார்ப்போம்.
சுக்கு காபி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
மாதவிடாய்
பல ஆண்டுகளாக, மாதவிடாயை சமன் செய்ய ஆயுர்வேத மருத்துவத்தில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. சுக்கு காபியில் போடப்படும் கொத்தமல்லி விதைகள் மாதவிடாய் சுழற்சியை மட்டுமல்ல, ஹார்மோன்களின் சமநிலைக்கும் உதவும். இந்த காபியில் பயன்படுத்தப்படும் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
மேலும் படிக்க | Diabetes Cure: சுகர் வெவலை விரைவாக கட்டுப்படுத்தும் மேஜிக் பானங்கள்
செரிமானத்திற்கு உதவும்
சுக்கு காபி வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, சளி அல்லது தொண்டை புண் போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது. இஞ்சி மற்றும் கொத்தமல்லியுடன் கூடிய சுக்கு காபி குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மட்டுமல்லாமல், குமட்டலுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.
உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் காபி குடிப்பது நல்லதல்ல. அதேநேரத்தில் சுக்கு தூளுடன் கூடிய மசாலாவில் செய்யப்பட்ட சுக்கு காபி இரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்க உதவுகிறது. இரத்த உறைவு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இரத்த சோகை
உங்கள் வீட்டில் யாருக்காவது இரத்த சோகை இருப்பதாக புகார் இருந்தால், அவருக்கு சுக்கு காபி பயனுள்ளதாக இருக்கும். சுக்கு காபி இரும்புச்சத்து நிறைந்த பனை வெல்லத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது இரத்த சோகை அபாயத்தைக் குறைக்கிறது.
மேலும் படிக்க | ’கோடை ஆப்பிள்’ நுங்கு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ