மடமடனு எடை குறையணுமா? மஞ்சள் தண்ணீரை இப்படி குடிங்க.. ஈசியா குறைச்சிடலாம்

Weight Loss Tips: மஞ்சள் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 12, 2023, 09:52 AM IST
  • உடல் எடையை குறைக்க மஞ்சள் உதவும்.
  • உடல் பருமனை குறைக்க மஞ்சள் தண்ணீரை இப்படி குடிக்கவும்.
  • மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
மடமடனு எடை குறையணுமா? மஞ்சள் தண்ணீரை இப்படி குடிங்க.. ஈசியா குறைச்சிடலாம் title=

Weight Loss Tips: இன்றைய அவசர வாழ்க்கை முறையில் உடல் பருமன் அனைவரையும் பாடாய் படுத்தும் ஒரு பிரச்சனை ஆகிவிட்டது. எதை சாப்பிட்டால் பித்தம் தெளியும் என ஒரு கூற்று உள்ளது. அதுபோல, எதை செய்தால் உடல் எடை குறையும் என அனைவரும் இதற்கான பல வித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதிக எடை கொண்டவர்கள் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை கொண்ட ஒருவர் 4-5 கிலோ எடையைக் குறைத்தாலும், பல நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அதிக நேரம் செலவழித்து உடற்பயிற்சி செய்யவோ, அல்லது, ஜிம் செல்லவோ நேரம் இல்லாதவர்கள் உணவு முறைகளில் சில மாற்றங்களை செய்து உடல் எடையை குறைக்க முயற்சிக்கலாம். ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பதற்கான (Weight Loss) ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். 

மஞ்சளின் நன்மைகள் (Benefits of Turmeric)

மஞ்சள் தங்க மசாலா என்று அழைக்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் மஞ்சளின் பல ஆரோக்கிய நன்மைகளை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்திய சமையலறையில் நாம் பல வித மசாலாப் பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த அனைத்து மசாலாக்களும் சுவை மற்றும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகின்றன. மஞ்சளும் உணவுகளின், சுவை, நிறம் ஆகியவற்றை அதிகமாக்கி ஆரோக்கியத்தையும் பராமரிக்கின்றது. குளிர்காலத்தில் மஞ்சளை அதிகமாக உட்கொள்வது நல்லதாக கருதப்படுகின்றது. ஏனெனில் மஞ்சளின் தன்மை வெப்பமானது. தூங்கும் முன் மஞ்சள் பால் குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. மஞ்சள் பால் சளி மற்றும் இருமல் பிரச்சனையை நீக்க உதவுகிறது. 

உடல் எடையை குறைக்க மஞ்சள் (Turmeric For Weight Loss)

மஞ்சள் தண்ணீரை குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைப்பது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் உதவும் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம்!! காலையில் வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த நீரை உட்கொள்வது உடலின் நச்சுத்தன்மையை போக்க உதவும். தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் எடையை குறைக்க மஞ்சள் தண்ணீரை எப்படி உட்கொள்வது என்று இங்கே காணலாம். 

மேலும் படிக்க | தினசரி உணவில் ப்ரோக்கோலியை எப்படி சேர்ப்பது? சுவையான வழிகள்

உடல் பருமனை குறைக்க மஞ்சள் தண்ணீரை இப்படி குடிக்கவும்: 

மஞ்சள் தண்ணீர் (Turmeric Water) தயாரிக்க, முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் பச்சை மஞ்சள் கட்டியை சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக குறைந்தவுடன் வடிகட்டி குடிக்கவும். பச்சை மஞ்சள் இல்லையென்றால் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு, வேகவைத்து வடிகட்டி குடிக்கவும். இதன் சுவை பிடிக்கவில்லை என்றால் இதில் தேன் சேர்த்தும் குடிக்கலாம். உடல் எடையை குறைக்க, இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of Drinking Turmeric Water)

மஞ்சளில் (Turmeric) வைட்டமின் சி, வைட்டமின் ஈ, இரும்புச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளன. பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டி-செப்டிக் பண்புகளும் இதில் காணப்படுகின்றன. இது பல வகையான பிரச்சனைகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். மஞ்சள் தண்ணீரை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) வலுப்படுத்த உதவும். அதுமட்டுமின்றி, சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை சரி செய்யவும் இது உதவுகிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பழங்களை இப்படி சாப்பிட்டால் பயனே இல்லை! எச்சரிக்கும் ஆயுர்வேதம்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News