இன்றைய காலக்கட்டத்தில் மோசமான வாழ்க்கை முறையால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு பெரும்பலானோருக்கு ஆபத்தான அளவில் தான் உள்ளது. அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை மிகவும் ஆபத்தானது. அதனால் தான், இளைஞர்கள் பலர் மாரடைப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், இதய நோய் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது. எனவே, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். அதற்கு கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் உணவுகளை தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்று நெல்லிக்காய்.
நெல்லிக்காய் ஜூஸை தினமும் குடிப்பதால் உடலுக்கு பல வியக்கத்தக்க பலன்கள் கிடைக்கும். ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு வித நோய்களுக்கு மருந்தாக பயான்படுத்தப்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் நெல்லிக்காய் சாறு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காய் ஜுஸ் கெட்ட கொழுப்பை எவ்வாறு குறைக்கிறது?
நெல்லிக்காயை ஜுஸ் வடிவில் அல்லது வேறு வகையில் உட்கொள்வது அதிக கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று பல ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆம்லா என்னும் நெல்லிக்காய் சாற்றில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள், கொலஸ்ட்ரால் உருவாவதற்கு காரணமான HMG-CoA ரிடக்டேஸ் என்ற நொதியின் செயல்பாட்டைத் தடுக்கிறது. நெல்லிக்காய் எல்டிஎல் என்னும் கெட்ட கொலஸ்ட்ராலுடன் ட்ரைகிளிசரைடு அளவையும் குறைக்கிறது. மேலும் லிப்போபுரோட்டீன் என்னும் நன்மை பயக்கும் HDL என்னும் நல்ல கொல்ஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.
நெல்லிக்காயை சாறு குடிக்கும் சரியான நேரம் எது?
நெல்லிக்காய் சாறு எந்த நேரத்திலும் குடிக்கலாம் என்றாலும், காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் அதிகபட்ச பலனைப் பெறலாம். நெல்லிக்காய் ஜூஸை காலையில் குடிப்பது வயிற்றுக்கு அதிக நன்மை பயக்கும். வேறு எந்த நேரத்திலும் குடிக்க வேண்டும் என்றால், சாப்பிடுவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாக அல்லது 2 மணி நேரம் கழித்தோ நெல்லிக்காய் சாறு குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அடாவடி கொழுப்பை அட்டகாசமாய் குறைக்கும் உணவுகள்: கண்டிப்பா தினமும் சாப்பிடுங்க
ஆம்லா சாறு ஒரு நாளைக்கு எந்த அளவிற்கு அருந்த வேண்டும்?
தினமும் 1 கப் ஆம்லா சாறு குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை குறைக்கலாம். நெல்லிக்காய் சாறு முடி, தோல் மற்றும் கண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். வீட்டிலேயே புதிய அம்லாவிலிருந்து சாறு எடுக்கலாம். இந்த ஜூஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. அம்லாவில் பல தாதுக்கள் உள்ளன, அவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கொலஸ்ட்ராலை எரிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை
பிரெஷ்ஷான 2 பச்சை நெல்லிக்காயை துண்டுகளாக வெட்டி விதைகளை அகற்றவும். இப்போது 1 கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நெல்லிக்காயை நன்றாக அரைக்கவும். இப்போது அதை வடிகட்டி 1 சிட்டிகை கருப்பு உப்பு சேர்க்கவும். இதை வடிகட்டாமல் கூட குடிக்கலாம். இதன் மூலம் முழுமையான நார்ச்சத்துகளும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | கண்களை பாதிக்கும் புற ஊதாக்கதிர்களில் இருந்து தப்பிக்க 8 வழிகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ