மக்களே உஷாரா இருங்க..வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால் இந்த பக்கவிளைவுகள் வரலாம்

Peanuts Side Effects: வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. ஆனால் சிலருக்கு வேர்க்கடலை சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 29, 2023, 06:54 PM IST
  • வேர்க்கடலை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்
  • வேர்க்கடலை சாப்பிடுவது சிலருக்கு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்
  • வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் என்ன தெரியுமா?
மக்களே உஷாரா இருங்க..வேர்க்கடலை அதிகம் சாப்பிட்டால் இந்த பக்கவிளைவுகள் வரலாம் title=

வேர்க்கடலை பக்க விளைவு: ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும், வேர்க்கடலையில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.  ஏனெனில் இதை சாப்பிடுவது பாதாம் பருப்பை போல பலன் தரும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது நீரழிவு நோயாளிகளுக்கு, இதய பாதிப்பு இருப்பவர்களுக்கு நன்மை பயக்கும். மேலும், இது உடலில்   நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் இருந்தாலும் சிலரது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

தைராய்டுக்கு தீங்கு விளைவிக்கும்: 
உங்களுக்கு ஹைப்போ தைராய்டிசம் இருந்தால், வேர்க்கடலை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். வேர்க்கடலை சாப்பிடுவது தைரோட்ரோபின் (தைராய்டைத் தூண்டிவிடும் ஹார்மோன்) அளவை அதிகரிக்கிறது, இது ஹைப்போ தைராய்டிசத்தை அதிகரிக்கிறது. வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும், ஆனால் வேர்க்கடலையை குறைந்த அளவில் சாப்பிடலாம்.

மேலும் படிக்க | bubble tea: ‘பபிள் டீ’ குடிங்க தலைவலிக்கு பாய் சொல்லுங்க..! செய்முறை - ஆரோக்கிய நன்மைகள்

கல்லீரல் பிரச்சனைகளை அதிகரிக்கிறது:
கல்லீரல் பிரச்சனை இருந்தால் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வேர்க்கடலையில் உள்ள பொருட்கள் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் அவற்றை சாப்பிடுவது கல்லீரலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டு அஜீரணம் ஏற்படும்.

ஒவ்வாமை இருந்தால் வேர்க்கடலையை உட்கொள்வதை தவிர்க்கவும்: 
சிலருக்கு சில உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். பலருக்கு வேர்க்கடலை என்றால் அலர்ஜியாக இருக்கும். வேர்க்கடலைக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் சுவாசிப்பதில் சிரமம் மற்றும் தோல் அரிப்பு போன்றவற்றை அனுபவிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வாமை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

எடையை அதிகரிக்கிறது: 
வேர்க்கடலையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். இதை சாப்பிடுவது ஆரோக்கியமானது, ஆனால் அதில் உள்ள கொழுப்பு எடையை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க டயட்டில் வேர்க்கடலை இருந்தால், இதை சாப்பிடுவதை தவிர்க்கவும்.

வேர்க்கடலையின் நன்மைகள்: 
வேர்க்கடலை சாப்பிடுவது இதயத்திற்கு நன்மை பயக்கும். வேர்க்கடலையில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் சத்துக்கள் உள்ளன. இதனை உண்பதால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. வேர்க்கடலையில் ஆலிவ் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகள் உள்ளன, இது வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

இதில் மெக்னீசியம் உள்ளது, இது இன்சுலின் சுரப்பை சீராக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் வேர்க்கடலை பயனுள்ளதாக இருக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | பூண்டு உடலுக்கு நல்லதுதான்! ஆனாலும் சாப்பிடும் முன் இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News