பிரிட்ஜ் தண்ணீருக்கு NO சொல்லுங்க..! பானை தண்ணீரின் நன்மைகள் இதோ..!

benefits of clay pot water: கோடை வெயில் கொளுத்தி எடுக்கும் நிலையில், பலரும் பிரிட்ஜ்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிக்கிறார்கள். ஆனால் பானையில் வைத்த குளிர்ந்த நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக் கிடக்கின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 30, 2023, 06:33 AM IST
பிரிட்ஜ் தண்ணீருக்கு NO சொல்லுங்க..! பானை தண்ணீரின் நன்மைகள் இதோ..! title=

இந்த ஆண்டு வழக்கத்தை விட எல்லா பகுதிகளிலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. காலை 10 மணிக்கெல்லாம் வெளியிலின் கடுமை அதிகரித்து மாலை 5 மணி வரை நீடிக்கிறது. சூரிய கதிர்கள் வெளியில் செல்வோரை குத்துகின்றன. இந்த நேரத்தில் அனைவரும் தற்காத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். 

உடலில் நீர் சத்தை தக்க வைக்க அவரவர் உடலுக்கு ஏற்ப போதுமான அளவு தண்ணீரை பருக வேண்டும். அதேநேரத்தில் சூட்டை தணிக்க பலரும் பிரிட்ஜ் தண்ணீருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனைவிட பானை நீரில் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. இதனை தெரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்களும் பானை தண்ணீருக்கு மாறிவிடுவீர்கள். 

குளிர்ந்த நீர்

பொதுவாக, வெயிலின் காரணமாக நாக்கு அடிக்கடி வறண்டு போய் காணப்படும். இதனால், அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், வெயிலின் காரணமாக பிளாஸ்டிக் வாட்டர்பாட்டில், குடம் உள்ளிட்டவற்றில் இருக்கும் போது அதனுடன் சேர்ந்து, நீரும் சூடாகி விடும். இந்த சூடான நீரைக் குடிக்கும் போது, நமக்கு தாகம் அடங்காமல் இருக்கும். எனவே, தாகம் தணிய குளிர்ந்த நீரைப் பருகலாம்.

மேலும் படிக்க | எலும்புகளையும் திசுக்களையும் பாதிக்கும் ‘விட்டமின் D3’ குறைபாடு... அறிகுறிகள் இவை தான்!

ஃபிரிட்ஜ் நீரைக் குடிக்கலாமா.?

தற்போதைய கால கட்டங்களில் குளிர்ந்த நீர் என்றால் எல்லோருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது குளிர்சாதனப்பெட்டி தான். ஆனால், நாம் வெயிலில் சென்று வந்து உடனே குளிர்சாதனப் பெட்டியில் உள்ள நீரைப் பருகும் போது உடல் சூடு அதிகமாவதை உணரலாம். அதே சமயம், இந்த குளிர்ச்சி இருமல், சளி உள்ளிட்டவற்றை வரவைக்கலாம். எனவே, பெரும்பாலும் ஃபிரிட்ஜ் நீரைப் பருகாமல் இருப்பது நல்லது.

பானை தண்ணீர்

ஃபிரிட்ஜ் நீர் வேண்டாம் என்றால், வேறு எந்த நீர் குளிர்ச்சியாக இருக்கும். நம் முதியோர்களின் நடைமுறையாக விளங்கிய பானைத் தண்ணீர் உடலுக்கு மிக அதிக நன்மைகள் அளிக்கிறது. அதே சமயம், நோய் தடுப்பானாகவும் உதவுகிறது. களிமண்ணால் செய்யப்பட்ட களிமண் பானை இயற்கையான முறையில் தண்ணீரை சேமிக்கும் சிறந்த வழியாகும். இதிலிருந்து தண்ணீர் குடிப்பதால், நாம் பல்வேறு விதமான நன்மைகளைப் பெறலாம்.

மண்பானை நீரின் நன்மைகள்

இயற்கையான குளிர்ச்சி

களிமண் பானையில் சேமித்து வைக்கப்படும் நீர் சரியான வெப்பநிலையில் இருக்கும். எனவே, இது குளிர்ச்சியை அளிக்கிறது. அதே சமயம், தொண்டை இதமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயை ஒழித்துக் கட்டும் ‘சில’ எளிய வீட்டு வைத்தியங்கள்!

பக்கவாதம் வராது

பொதுவாக, கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, சூரியக் கதிர்களால் பக்கவாதம் ஏற்படும். மண் பானையில் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பருகும் போது, அதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் போன்றவை நம் உடலைக் குளிரூட்டுவதுடன், குளுக்கோஸின் அளவைப் பராமரிக்கிறது. இது சன் ஸ்ட்ரோக் எனப்படும் சூரியக் கதிர்களால் ஏற்படும் பக்கவாதத்தைக் குறைக்கிறது.

நச்சுத்தன்மை இல்லாதது

களிமண் பானையில் உள்ள தண்ணீரில் எந்த வித நச்சு இரசாயனங்களும் இருக்காது. எனவே, இந்த தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும்.

பருவகால நோய்களை சரிசெய்ய

கோடை வெப்பத்தால், சரும நோய், அம்மை உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். மண் பானை நீரில் இருக்கக் கூடிய கனிம சத்துக்கள் இந்த பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.

மெட்டபாலிசம் அதிகரிப்பு

சாதாரண நீரை விட, களிமண் பானையில் சேமித்து வைக்கும் நீரைக் குடிப்பதன் மூலம், உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு சமன் செய்யப்படுகிறது. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் பருமனை சட்டென்று குறைக்க உதவும் ‘மேஜிக்’ மசாலாக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News