தீராத மலச்சிக்கலை ஒழித்து கட்ட... உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்!

மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​பல நாட்கள் வயிறு சரியாக சுத்தம் ஆகாமல் இருந்தால், உடல் நோயின் கூடாரமாகி விடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 7, 2023, 04:49 PM IST
  • மலச்சிக்கலுக்கான காரணத்தை சரியாக புரிந்து கொண்டால், அதற்கு சிகிச்சையளிப்பது அவ்வளவு கடினம் அல்ல.
  • உணவுடன் காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம்.
  • மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிகளை அறிந்து கொள்ளலாம்.
தீராத மலச்சிக்கலை ஒழித்து கட்ட... உணவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்! title=

மலச்சிக்கல் பிரச்சனை இன்று மக்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது. இப்போது மக்கள் அதை புறக்கணிக்கத் தொடங்கியுள்ளனர்.  மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​பல நாட்கள் வயிறு சரியாக சுத்தம் ஆகாமல் இருந்தால், உடல் நோயின் கூடாரமாகி விடும். மலச்சிக்கலுக்கு பல உள் காரணங்கள் இருந்தாலும், மோசமான வாழ்க்கை முறையும், ஆரோக்கியமற்ற உணவு முறையும் மலச்சிக்கலுக்கு மிகப் முக்கிய காரணம் என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

மலச்சிக்கலுக்கான காரணத்தை சரியாக புரிந்து கொண்டால், அதற்கு சிகிச்சையளிப்பது அவ்வளவு கடினம் அல்ல. இந்த கட்டுரையில், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்கான சில வழிகளை அறிந்து கொள்ளலாம். இது மலச்சிக்கலை மட்டுமல்ல, அதன் காரணத்தையும் குணப்படுத்துகிறது. வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கலில் இருந்து விடுபட செய்ய வேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம்.

மலச்சிக்கலை போக்க 5 வழிகள்

உங்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை தொடர்பான இந்த 5 மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் சரியாக பின்பற்றினால், உங்கள் வாழ்நாள் முழுவதும் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

1. தினசரி உணவில் காய்கறிகள்

உணவுடன் காய்கறிகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம், சில சமயங்களில் காய்கறிகளை தவிர்ப்பது தான், மலச்சிக்கலுக்கு மிக முக்கிய காரணம். உங்கள் உணவில் பச்சை சாலட் காய்கறிகள் மற்றும் வேக வைத்த காய்கறிகள் இரண்டையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | சீயக்காய் தூள் ஒன்று மட்டும் போதும்.. தலை முடி காடு போல வளரும்

2. தினமும் ஒரு பழமாவது நிச்ச்யாம் வேண்டும்

உங்கள் உணவில் தினமும் குறைந்தது ஒரு பழத்தையாவது சேர்த்துக்கொள்ளுங்கள், தினமும் வெவ்வேறு பழங்களை சாப்பிடுங்கள். பருவகால பழங்களை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பழங்களில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. ஜூஸாக அருந்துவதை விட, பழமாக சாப்பிடுவதால், நார்சத்து முழுமையாக கிடைக்கும்

3. காலையில் நடைபயிற்சி அவசியம்

மலச்சிக்கலில் இருந்து விடுபட உணவுமுறை மட்டுமின்றி உடல் உழைப்பும் மிக அவசியம். அதனால் தான் அதிகாலையில் எழுந்து குறைந்தது 1000 அடிகள் நடக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இப்படி செய்வதால் மலச்சிக்கலில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

4. நீரும் அதிகம் குடித்துக்கொண்டே இருங்கள்

உடலில் நீர் பற்றாக்குறையும் மலச்சிக்கலுக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம், எனவே ஒருவர் தொடர்ந்து தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர பழச்சாறு, மோர், பால் போன்ற பிற பானங்களையும் உட்கொள்ள வேண்டும்.

5. போதுமான தூக்கம்

நீங்கள் இரவு வெகுநேரம் வரை விழித்திருந்தால், அது உங்கள் செரிமானத்தையும் பாதிக்கும், அதே நேரத்தில் உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையும் இருக்கலாம். அதனால் தான் நீங்கள் தினமும் இரவில் சரியான நேரத்தில் தூங்க வேண்டும், அதனால் உங்கள் தூக்கம் நிறைவை அடைந்து காலையில் புத்துணர்ச்சியாக உணரலாம்

மலச்சிக்கல் படிப்படியாக நீங்கும்

இருப்பினும், இந்த நடவடிக்கைகளால் மலச்சிக்கல் பிரச்சனை படிப்படியாக தான் நீங்கும்  என்பதையும் அறிந்து கொள்வது அவசியம். ஏனென்றால்,  வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை மாற்றங்கள், மலச்சிக்கலில் இருந்து படிப்படியாக நிவாரணம் கிடைக்கும். எனினும் திரிவு நிரந்திரமானதாக இருக்கும். எனவே, உங்களுக்கு அதிகப்படியான மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், சில வீட்டு வைத்தியம் அல்லது மருத்துவரின் உதவியை எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய முறைகளைப் பின்பற்றிய சில வாரங்களுக்குப் பிறகு, உங்கள் செரிமான அமைப்பு தானாகவே மேம்படும். உங்கள் வயிறு சுத்தமாகத் தொடங்கும்.

மருத்துவரை தொடர்பு கொள்ளவும்

இருப்பினும், இந்த முறைகள் மலச்சிக்கலுக்கு உடனடி நிவாரணம் அளிக்காது என்பதை நாங்கள் மேலே கூறியுள்ளோம். படிப்படியாக, செரிமானம் மேம்படும் போது, ​​மலச்சிக்கலும் சரியாகத் தொடங்குகிறது. எனவே, உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை அதிகமாக இருந்தால், கண்டிப்பாக மருத்துவரிடம் பேசுங்கள். ஏனென்றால் சில சமயங்களில் அதிகப்படியான மலச்சிக்கல் உடலின் சில உள்நோய்களின் அறிகுறியாக இருக்கலாம், மேலும் விரைவில் அதற்கு சிகிச்சையளிப்பதும் அவசியம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வயிற்றில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? மிகப்பெரிய பிரச்சனையில் முடியும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News