அசைவ பிரியர்களே உஷார்!! இதை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாகலாம்

Diabetes: ஒருவருக்கு ஒருமுறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை கட்டுப்படுத்ததான் முடியும், குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 21, 2024, 05:23 PM IST
  • சிவப்பு இறைச்சி நீரிழிவு நோயை அதிகரிக்கும்.
  • ஆய்வில் வெளிவந்த தகவல்.
  • ரெட் மீட் சாப்பிடும் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது.
அசைவ பிரியர்களே உஷார்!! இதை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாகலாம் title=

Diabetes: இன்றைய அவசர உலகில் பல நோய்கள் மனித குலத்தை பாடாய் படுத்தி வருகின்றன. அதுவும் கடந்த சில தசாப்தங்களாக இந்த நோய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அவற்றில் நீரிழிவு நோய்க்கு முதலிடம் என்றே கூறவேண்டும். மரபியல் காரணங்களுடன் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறையும் இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.

ஒருவருக்கு ஒருமுறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை கட்டுப்படுத்ததான் முடியும், குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையாக உள்ளது. இது நேரடியாக உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும், இதனால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல வித குறைபாடுகள் உடலில் ஏற்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் அவர்கள் உட்கொள்ளும் உண்வில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மிகவும் கவனாக இருக்க வேண்டும். 

நீரிழிவு நோயை அதிகமாக்கும் அசைவ உணவுகள்

தென்கிழக்கு ஆசியா உட்பட உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளைச் சேர்ந்த 19 லட்சத்திற்கும் அதிகமானவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சிவப்பு இறைச்சியை உட்கொள்வது டைப்-2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிப்பது தெளிவாகியுள்ளது. இந்த அறிக்கையில் வெளிவந்துள்ள பிற முக்கியமான தகவல்கள் பற்றி இங்கே காணலாம். 

மேலும் படிக்க | உடல் பருமன் முதல் நீரிழிவு வரை... வாழைக்காய் செய்யும் அற்புதங்கள் பல

சிவப்பு இறைச்சி நீரிழிவு நோயை அதிகரிக்கும்

50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, 100 கிராம் பதப்படுத்தப்படாத சிவப்பு இறைச்சி மற்றும் 100 கிராம் கோழி இறைச்சி ஆகியவற்றை தினமும் சாப்பிடுவதால், டைப்-2 நீரிழிவு நோயின் அபாயம் முறையே 15 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 8 சதவிகிதம் அதிகரிப்பதாக 'தி லான்செட் நீரிழிவு மற்றும் எண்டோகிரைனாலஜி' இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

சிவப்பு இறைச்சியை அதிகம் உட்கொள்ளும் மக்கள்

அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு, உலகின் பல பகுதிகளில், மக்கள் பாதுகாப்பான அளவை விட அதிகமாக சிவப்பு இறைச்சியை உட்கொள்வதாகக் கூறியுள்ளனர். இதன் காரணமாக டைப்-2 நீரிழிவு (Type 2 Diabetes) உள்ளிட்ட தொற்றாத நோய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது பீதியை கிளப்பியுள்ளது.

ரெட் மீட் சாப்பிடும் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது

சிவப்பு இறைச்சி (Red Meat) குறித்த இந்த ஆய்வுக்காக, ஆராய்ச்சியாளர்கள் 31 குழுக்களை உள்ளடக்கியுள்ளனர். அதற்கான தரவு அறிவியல் ஆய்வுகள் மற்றும் ஆன்லைன் பதிவுகளிலிருந்து சேகரிக்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற 19,66,444 பேரில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டைப்-2 நீரிழிவு நோய் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது பொதுவாக 10 ஆண்டுகள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மாரடைப்புக்கு முக்கிய காரணமாகும் ஐஸ்கிரீம்... எச்சரிக்கும் மருத்துவ ரிப்போர்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News