உடல்நலக்கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான கருத்தரிப்பை பெண்கள் மற்றும் அவர்களின் பார்ட்னர்கள் விரும்புவதில்லை. இதனால் கருத்தரிப்பை தடுக்க மாத்திரைகள் மற்றும் ஆணுறைகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகின்றனர். இதன்மூலம் உடல்நலக்கோளாறுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மோசமான ஆணுறைகள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தியால் பக்கவிளைவுகள் மூலம் அவதிப்படுவபவர்களும் உள்ளனர். இதில் ஆண் மற்றும் பெண் என இருபாலரும் கவனமாக இருப்பது அவசியம். சிறிய கவனக்குறைவும் ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
சரி, கருத்தரிப்பை தடுக்க ஆணுறை மற்றும் மாத்திரைகள் தவிர வேறு வழிகள் இல்லையா? என பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. மருத்துவ உலகில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வுகள் அல்லது ஏதேனும் ஒரு வழிமுறைகள் இருக்கின்றன. இவையெல்லாம் இல்லாமல் இயற்கை முறையிலேயே கர்ப்பத்தை தடுக்க முடியும். அதற்கு ரிதம் முறை என்று பெயர்.
மேலும் படிக்க | இந்த '3' பழக்கங்கள் உங்கள் உடல் ஆசைக்கு ஆபத்தானவை
ரிதம் முறை என்றால் என்ன?
ரிதம் முறை,காலண்டர் முறை என்றும் அழைக்கப்படுகிறது. கர்ப்பத்தைத் தடுப்பதற்கான ஒரே வழி ரிதம் முறை ஆகும். இதில் ஒரு பெண் தனது மாதவிடாய் சுழற்சி மற்றும் இனப்பெருக்க காலத்தை கண்காணிக்க வேண்டும். ஒவுலேஷன் என்படும் அண்டவிடுப்பு ஏற்பட்டு அப்போது தான் கருமுட்டைகள் வெளியேறிக் கொண்டிருக்கும் நாட்களில் இருவரும் இணைந்தால் கர்ப்பம் தரிப்பதற்கு 95 விழுக்காடு வாய்ப்புகள் இருக்கின்றன. அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக இருப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை இந்த நேரத்தில் நீங்கள் இருந்தால், கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர வேறுவழியில்லை.
என்ன செய்ய வேண்டும்?
அண்ட விடுப்பு நாட்களில் இருவரும் இணைய விருப்பம் தெரிவித்தால் ஆணுறை பயன்படுத்துங்கள். இல்லையென்றால், அந்த நேரத்தில் உடலுறவு கொள்ளாமல் இருப்பதே நல்லது. மாதாவிடாய்க்கு சில நாட்களுக்கு முன்பு உடலுறவு கொண்டால் கூட கருத்தரிப்பு வாய்ப்பு குறைவு என கூறுவார்கள். ஓவுலேஷன் நாட்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக இருந்தாலும் கருத்தரிப்பு வாய்ப்பு குறைவு.
மேலும் படிக்க | மாங்கொட்டையில் இருக்கும் நன்மைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR