எடை குறைப்பு குறிப்புகள்: இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். மக்கள் தங்கள் உடல் எடையை பராமரிக்க பல வழிகளை பின்பற்றுகிறார்கள். உடல் எடையைக் குறைக்க, ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள், டயட்டில் இருக்கிறார்கள். இருப்பினும், பல சமயங்களில், இவற்றாலும் எந்த நல்ல பலனையும் பெறுவதில்லை. எனினும் சில எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் நாம் நம் உடல் எடையை குறைக்கலாம்.
உடல் எடையை குறைக்க நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு நாம் எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் முக்கியமாகும். சரியான நேரத்தில் சரியான உணவை சாப்பிட்டாலே உடலில் உப்பசம் அதிகரிக்காமல் இருக்கும். இதன் மூலம் நம் உடல் எடையையும் நாம் குறைக்கலாம். காலை, மதியம், இரவு என நாம் உண்ணும் நேரமும், அளவும், முறையும் நமது உடல் ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இரவு உணவிற்கு ஏற்ற நேரம்:
நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், உங்கள் உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். தற்போது உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் பற்றிய புரிதல் அதிகரித்துள்ளது. நீங்கள் உங்கள் சமையலறை மற்றும் குளிர்சாதனப்பெட்டியில் எடையை அதிகமாக்கும் செயற்கை பானங்கள் மற்றும் இனிப்பு பண்டங்களுக்கு பதிலாக, ஆரோக்கியமான உணவுகளை சேமித்கிருக்கலாம். அதிக சத்தான மாற்றுகளுடன் அவற்றை மாற்றியிருக்கலாம். இது மட்டுமல்ல, நீங்கள் உட்கொள்ளும் கலோரிகளையும் கண்காணிக்கலாம். உண்ணும் உணவின் அளவு குறித்து நீங்கள் அதிக கவனம் செலுத்தலாம். ஆனால் இரவு உணவின் நேரத்தை மாற்றுவது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
எடை இழப்புக்கு நீங்கள் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், அறிவியல் ஆய்வுகள் இதில் இன்னும் பலவற்றுக்கும் முக்கியத்துவம் உள்ளன என்பதைக் காட்டுகின்றன. நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும். எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இந்த பதிவில் நாம் உணவு உட்கொள்ளும் நேரத்திற்கும் எடை இழப்புக்கும் உள்ள தொடர்பைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் எந்த நேரத்தில் இரவு உணவை உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | ஒரே வாரத்தில் ஓவர் வெயிட் தெறிச்சு ஓட 'இந்த' டீ மட்டும் குடிங்க
உணவு நேரம் மற்றும் எடை இழப்புக்கு என்ன சம்பந்தம்?
எடை இழப்பு என்று வரும்போது, எவ்வளவு கலோரிகள் உட்கொள்ளப்படுகிறது என்பதுதான் முக்கியம், நீங்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகிறீர்கள் என்பது அல்ல என பலர் நினைக்கிறார்கள். உடல் எடையைக் குறைப்பது கடினமானது, அதனால் உங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் எதுவானாலும் அது கருத்தில் கொள்ளத்தக்கது என்று பிரபல உணவுக் கலை நிபுணர் கேந்த்ரா ஹைர் விளக்குகிறார். நீங்கள் எவ்வளவு விரைவாக எடை இழக்கிறீர்கள் என்பதில் உணவு நேரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரவு உணவு சாப்பிட சரியான நேரம் என்ன?
பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் மூலம் பலரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், வெற்றிகரமாக எடையை குறைத்தவர்கள் இரவு 7 மணி முதல் 7:30 மணிக்குள் வரை இரவு உணவை சாப்பிட்டனர் என்பது தெரிய வந்துள்ளது. அதேசமயம் இரவு 10:30 முதல் 11 மணிக்குள் சாப்பிட்ட குழு எடை குறைப்பதில் வெற்றிபெறவில்லை. இரவு 7 அல்லது 7:30 மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது எடை இழப்புக்கு மிக உதவியாக இருக்கும் என சுகாதார நிபுணர்களும் கூறுகிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இரவில் இந்த 3 பானங்களை குடித்தால்... தொப்பை ஈஸியாக குறையும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ