நோயற்ற வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.. சில உணவு பழக்கங்கள்..!!

Simple Diet Habits: ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை 'தவிர்ப்பதும்' சில விஷயங்களை'கட்டாயம்'கடை பிடிப்பதும் உதவும். குறிப்பாக சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகளை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 24, 2024, 08:00 PM IST
  • தாகம் ஏற்படும் போது தான் தண்ணீர் அருந்த வேண்டும் என இருக்கக் கூடாது.
  • டயட்டிங் என்றால் பட்டினியாக இருப்பது என்று பலர் நினைக்கின்றனர்.
  • ஆரோக்கியமாக இருக்க உதவும் 20-80 விதி
நோயற்ற வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.. சில உணவு பழக்கங்கள்..!! title=

உடல் ஆரோக்கியத்திற்கும் உணவு முறைக்கும் நேரடி தொடர்பு உண்டு. அதனால் தான் உணவே மருந்து என நம் முன்னோர்கள், அளவாக, ஆரோக்கியமாக சாப்பிட்டு, வளமாக வாழ்ந்தனர். ஆனால், இன்றைய மோசமான வாழ்க்கை முறை காரணமாக, ​​தற்போது இளம் வயதினரிடம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகம் காணப்படுவதாக சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை 'தவிர்ப்பதும்' சில விஷயங்களை'கட்டாயம்'கடை பிடிப்பதும் உதவும். குறிப்பாக சாப்பாட்டு விஷயத்தில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிகளை அறிந்து கொள்ளலாம்.

சமச்சீர் உணவை டயட்டில் சேர்த்துக் கொள்ளுதல்

டயட்டிங் என்றால் பட்டினியாக இருப்பது என்று பலர் நினைக்கின்றனர். டயட் என்பது உடலை பலவீனப்படுத்துவதாக இருக்க கூடாது. டயட் என்பது உடலுக்கு ஊட்டமளிப்பதாக இருக்க வேண்டும். உணவு அனைத்து ஊட்ட்டச்சத்துக்களையும் கொண்ட சமச்சீரான உணவாக இருந்தால் மட்டுமே பலன் அளிக்கும். அதாவது, உணவில் உள்ள புரதங்கள், வைட்டமின்கள், கனிமங்கள் கார்போஹைட்ரேட்டுகள், நார்சத்துக்கள் ஆகியவற்றோடு கொழுப்புகளும் தேவை. குடல் ஆரோக்கியத்திற்கு (Health Tips) புரோபயாடிக்குகளையும் எடுத்துக் கொள்வது அவசியம்.

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!

ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் சாலட்கள்

சாலட் இல்லாமல் உணவு உண்ணக் கூடாது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடும் போது, கோதுமை - அரிசி ஆகியவற்றை அளவை குறைத்து காய்கறிகளை அதிகம் உண்ணும்போது நீங்கள் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறையும். சீக்கிரம் பசியும் எடுக்காது, ஏனென்றால் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். அதோடு, புரத சத்திற்காக பருப்புகளையும், ஆரோக்கியமான கொழுப்புகளையும் உங்கள் உணவில்  சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆரோக்கியமாக இருக்க உதவும் 20-80 விதி

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, வயிறு முட்ட முட்ட சாப்பிடக் கூடாது. வயிறு கொஞ்சம் காலியாக இருக்க வேண்டும். அதற்கு 20-80 விதியைப் பின்பற்றவும். உங்கள் வயிறு 80 சதவீதம் நிறையும் அளவே சாப்பிட வேண்டும். மேலும் உங்கள் உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுகள் அதிகமாக இருக்க வேண்டும். அதாவது உணவில் 80 சதவிகிதம் ஆரோக்கிய உணவுகளும், 20 சதவிகிதம் உங்கள் மனதிற்கு பிடித்த உணவுகளும் இருக்க வேண்டும்.

அதிக அளவில் தண்ணீர் குடித்தல்

தாகம் ஏற்படும் போது தான் தண்ணீர் அருந்த வேண்டும் என இருக்கக் கூடாது. அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து பற்றாக்குறையை அனுமதிக்காமல் இருந்தால், பல நோய்களைத் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சரும பளபளப்பாக, இளமையுடன் இருக்கவும் நீர்ச்சத்து மிகவும் முக்கியம்.

டயட் பழங்கள் கட்டாயம் இருக்கட்டும்

தினமும் இரண்டு விதமான பழங்களை சாப்பிட வேண்டும். அவை பருவகால பழங்களாக இருக்க வேண்டும். இதனால், செலவும் குறைவு. குடலுக்கும் நல்லது. சாப்பாட்டு நேரத்திற்கு இடையில், சிற்றுண்டிக்கு பதிலாக, பழங்களை சாப்பிடுவது நல்லது. சாதாரண தண்ணீருக்கு பதிலாக நடுவில் தினமும் 1 டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்வது சிறப்பு.

மேலும் படிக்க | இதமளிக்கும் இளநீர்: சுவை, ஆரோக்கியம், நோய்களிலிருந்து நிவாரணம் தரும் சூப்பர் ட்ரிங்க்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News