Health Tips: வெப்பத்திற்கு சவால்விடும் தர்பூசணியின் சூப்பர் நன்மைகள்

கோடைக்காலத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு வெப்பச் சலனம் குறித்து வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கைகளும், இந்த கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 23, 2022, 09:20 AM IST
  • ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தர்பூசணி
  • ரத்த ஓட்டத்திற்கு உகந்தது
  • எலக்ட்ரோலைட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த தர்பூசணி
Health Tips: வெப்பத்திற்கு சவால்விடும் தர்பூசணியின் சூப்பர் நன்மைகள் title=

கோடைக்காலத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதோடு வெப்பச் சலனம் குறித்து வானிலை ஆய்வு மையம் விடுக்கும் எச்சரிக்கைகளும், இந்த கோடை வெயிலை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது.

இந்த சூழ்நிலையில், ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. கோடையில் உடல் வெப்பத்தை சமமாக பராமரிக்க உண்ணும் உணவில் சில மாற்றங்களை செய்ய வேண்டும், 

மார்கழி மாதத்திலேயே, வெப்பச் சலனம், அனல் காற்று எச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு கோடை கடுமையாக இருக்கும் என்ற அச்சங்கள் அதிகரித்துள்ளன.

எனவே, உடல் ஆரோக்கியத்திலும், சுகாதாரத்திலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க | மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கும் ‘பச்சை’ இஞ்சி

இந்த ஆண்டு கோடை ஆரம்பமாகி, வெப்பத்தின் தாக்கம் வேகமாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. 

நீர்சத்துக்கள் உட்பட உடலுக்கு தேவையான சத்துக்கள் பூரணமாக கிடைப்பதை உறுதிப்படுத்த சில பழங்களை சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அத்தகைய பழங்களில் ஒன்று தர்பூசணி.  

health

கோடையின் கோபத்திலிருந்து உடலைப் பாதுகாக்க, தினசரி உணவில் தர்பூசணியை சேர்த்துக்கொள்ளுங்கள். தர்பூசணியை அடிக்கடி சேர்த்துக் கொண்டால் ஏற்படும் சிறப்பு நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

1. கோடையில் ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை நீர்ச்சத்து குறைபாடு அதாவது உடலில் தண்ணீரின் அளவு குறைவது. உடலில் தண்ணீர் பற்றாக்குறையால், பலவீனம் அதிகரித்து ஆரோக்கியம் கெடத் தொடங்குகிறது. 

இதைத் தவிர்க்க, போதுமான அளவு தண்ணீர் குடிப்பதோடு, கண்டிப்பாக தினமும் தர்பூசணியை உட்கொள்ளுங்கள். இதில் 92% திரவம் இருப்பதால் உடலுக்கு போதுமான நீரேற்றம் கிடைக்கும்.

health

2. தர்பூசணியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி1, வைட்டமின் பி-5, வைட்டமின் பி6 போன்ற சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளும் உள்ளன, இது உடலுக்கு பெரும் நன்மைகளை அளிக்கிறது.

3. தர்பூசணி சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நீர் மற்றும் நார்ச்சத்து வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இது பசியைக் குறைத்து, உணவு உட்கொள்ளும் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

health

4. ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக மக்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள். தர்பூசணியை உட்கொள்வது இந்த வெப்ப அபாயத்திலிருந்தும் பாதுகாக்கிறது. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் வெளிப்புற வெப்பத்தை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது.

5. நல்ல செரிமானத்திற்கு, நார்ச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கோடை காலத்தில் தர்பூசணியை உட்கொள்வதும் செரிமானத்தை சீராக பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | முகத்தின் அழகை சீர்குலைக்கும் ‘கருவளையங்களை’ விரட்ட சில எளிய டிப்ஸ்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News