இந்த செயல்கள் நமக்கே தெரியாமல் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்!

தூக்கமின்மை பல நோய்களுக்கு திறவுகோலாக இருக்கின்றது மற்றும் போதிய தூக்கமின்மை இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.   

Written by - RK Spark | Last Updated : Nov 27, 2022, 12:10 PM IST
இந்த செயல்கள் நமக்கே தெரியாமல் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்! title=

உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய் பொதுவான ஒன்றாக மாறிவிட்டது, வயது வித்தியாசமின்றி இப்போது நீரிழிவு நோய் அனைவருக்கும் வர தொடங்கிவிட்டது.  உணவுமுறை, மரபணு போன்ற பல காரணிகள் இளவயதிலேயே சர்க்கரை நோய் வருவதற்கு காரணமாக அமைகின்றது.  சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதனை கட்டுக்குள் தான் வைத்திருக்க முடியுமே தவிர மற்றபடி அதனை குணப்படுத்த முடியாது.  அவ்வாறு சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய் மற்றும் இதய நோய்கள் போன்றவை ஏற்படும், சில சமயங்களில் இதனால் மரணம் கூட ஏற்பட வாய்ப்புள்ளது.  எவ்வளவுதான் நாம் உணவுக்கட்டுப்பாட்டுடன் இருந்தாலும் நாம் தவறுதலாக செய்யும் சில விஷயங்கள் நம் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும், அந்த காரணிகள் என்னென்னவென்று இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்க | உடல் பருமன் மள மளவென குறையணுமா... ‘இவற்றை’ வயிறு நிரம்ப சாப்பிடுங்க! 

1) நீங்கள் சாப்பிடக்கூடிய உணவில் செயற்கையான இனிப்புகள் இருந்தால் உங்களது உடலில் கண்டிப்பாக ரத்த சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.  சாக்கரின் மற்றும் சுக்ரோலோஸ் போன்ற செயற்கை இனிப்புகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம், அதனால் இயற்கையான இனிப்பு சுவையுள்ள ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

2) தூக்கமின்மை பல நோய்களுக்கு திறவுகோலாக இருக்கின்றது மற்றும் போதிய தூக்கமின்மை இரத்தத்தில் உள்ள சர்க்கரையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.  போதுமான அளவு தூங்காவிட்டால் உங்கள் உடலில் இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்படும், இதன் காரணமாக ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.

3) அன்றைய நாளுக்கு தேவையான முழு ஊட்டசத்தையும் தருவது காலை உணவு தான், அப்படிப்பட்ட காலை உணவைத் தவிர்க்க நினைப்பது முற்றிலும் தவறானது.  மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு இரத்தச் சர்க்கரை அதிகரிக்கும் என்பதால், காலை உணவைத் தவிர்ப்பது உங்கள் ஆரோக்கியத்தை மோசமடைய செய்யும்.  சுறுசுறுப்பாக இருக்க காலையில் புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது நல்லது.

4) நீர் ஒரு சிறந்த அமிர்தமாக கருதப்படுகிறது, ரத்த சர்க்கரை அளவில் நீரிழப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.  உடலில் தண்ணீர் அளவு குறைவாக இருந்தால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்.  எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

5) அமர்ந்த வாழ்க்கை முறையில் இல்லாமல் உடல் செயல்பாடு அதிகமாக இருந்தால் பல நோய்களும் ஓடிவிடும்.  உடல் செயல்பாடு இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்த உதவும். எனவே, ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.  உடற்பயிற்சி செய்வது உடலின் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது மற்றும் செல்கள் இரத்தத்தில் இருந்து குளுக்கோஸை ஆற்றலாக மாற்றுகிறது. 

6) பலருக்கும் காபி அல்லது தேநீர் குடிப்பது மிகவும் விருப்பமான ஒன்றாகும், காபியில் நிறைந்துள்ள காஃபின் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல.  ஒரு கப் காபி குடித்த பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைக் காண முடியும்.

7) மோசமான பல் ஆரோக்கியம் கூட உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும் என்று கூறப்படுகிறது,  ஈறு நோய் டைப் 2 நீரிழிவு நோயின் சிக்கல்களில் ஒன்றாகும், ஆரோக்கியமற்ற ஈறுகள் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யலாம்.

8) கார்டிகோஸ்டீராய்டுகள், ஆஸ்துமா மருந்துகள், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் சில மன அழுத்தத்திற்கான மருந்துகள் போன்ற சில மருந்துகள் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.

மேலும் படிக்க | Diabetic Diet: இவற்றை உணவில் சேருங்கள், சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News