Urinary Tract Infection: சிறுநீர் பாதை தொற்றா... ‘இதை’ ட்ரை பண்ணுங்க!

பெண்களுக்கு ஏற்படும் மிகப் பொதுவான பாக்டீரியா தொற்றுகளில் சிறுநீர் பாதை தொற்றும் (Urinary Tract Infection) ஒன்றாகும். சுமார் 50 முதல் 60 சதவீத பெண்கள், தங்களது வாழ்நாளில் ஒரு சில முறையேனும் சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாகின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2023, 09:32 PM IST
  • சுமார் 50 முதல் 60 சதவீத பெண்கள், சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாகின்றனர்.
  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வாட்டும்.
  • UTI தொற்றொல் எரிச்சலைக் குறைக்க இளநீர் உதவும்.
Urinary Tract Infection: சிறுநீர் பாதை தொற்றா... ‘இதை’ ட்ரை பண்ணுங்க! title=

பெண்களுக்கு ஏற்படும் மிகப் பொதுவான பாக்டீரியா தொற்றுகளில் சிறுநீர் பாதை தொற்றும் (Urinary Tract Infection) ஒன்றாகும். சுமார் 50 முதல் 60 சதவீத பெண்கள், தங்களது வாழ்நாளில் ஒரு சில முறையேனும் சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாகின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்த நோய் ஆபத்தான நோய் இல்லை என்றாலும், இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு பல விதமான அசௌகரியங்கள் ஏற்படக் கூடும். குறிப்பாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். மேலும், சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வாட்டும். இதற்கு இளநீர் சிறந்த தீர்வைத் தரும்.

இளநீர் எப்போதும் பெண்களின் ஆரோக்கியத்திற்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. கர்ப்ப கால பிரச்சனைகள் முதல், சிறு நீர் பாதை தொற்று வரை உடலின் பல பிரச்சனைகளுக்கு இளநீர் ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது. இதில் பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இளநீர் ஒரு டையூரிடிக் என்று கருதப்படுகிறது. UTI எனப்படும் சிறு நீர் பாதை தொற்று இருந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். மேலும், சிறுநீர் கழிக்கும் போது வலி மற்றும் எரிச்சல் உணர்வும் தோன்றும். இளநீர் இந்த சிக்கலை தீர்க்கிறது.

UTI தொற்றொல் எரிச்சலைக் குறைக்க இளநீர் உதவும். உண்மையில் இதை குடிப்பதால் உடலில் உள்ள நீரின் அளவு அதிகரித்து, சிறுநீர் எரியும் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கிறது. இளநீர் உங்கள் PH அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. pH சமநிலையற்றதாக இருக்கும்போது, ​​தொற்று பெருகத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், இளநீர் உள்ள எலக்ட்ரோலைட் அதிகரித்த pH அளவை சமன் செய்கிறது.

சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய இளநீர் உதவுகிறது. UTI தொற்றில், சிறுநீர்ப்பை பாக்டீரியா சிறுநீரில் எரியும் உணர்வை அதிகரிக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இளநீர் குடிப்பதால் உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்து சிறுநீர் எளிதாக வெளியேறும். இதன் காரணமாக, சிறுநீர்ப்பையில் உள்ள பாக்டீரியா எளிதில் வெளியேற்றப்படுகிறது.

மேலும் படிக்க | Jaggery Benefits: ‘இந்த’ செய்தியை படித்தால் சர்க்கரையில் இருந்து வெல்லத்திற்கு மாறிடுவீங்க!

இளநீர் ஒரு பாக்டீரியா எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. இதனால் சிறு நீர் தொற்றின் போது உடலில் ஏற்படும் பலவீனத்தை குறைக்கிறது. அடிக்கடி சிறுநீர் கழிப்பதால், நீரிழப்பு காரணமாக கால்கள் மற்றும் கைகளில் ஏற்படும் விறைப்புத்தன்மையும் குறைகிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சேதமடைந்த நுரையீரலுக்கும் புத்துயிர் கொடுக்கும் ‘வஜ்ரதந்தி’ மலர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News