Watermelon: நீண்ட நேர தாம்பத்தியத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் இயற்கை வயக்ரா தர்பூசணி!

தர்பூசணிப் பழத்தின் பொதுவான பலன்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், இதுவொரு இயற்கையான வயக்ரா என்பது தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 3, 2021, 11:49 AM IST
  • தர்பூசணியின் ஊட்டச்சத்துக்கள்
  • ரத்த ஓட்டத்திற்கு உகந்தது
  • எலக்ட்ரோலைட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்தது தர்பூசணி
Watermelon: நீண்ட நேர தாம்பத்தியத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் இயற்கை வயக்ரா தர்பூசணி!    title=

சுலபமாக கிடைக்கும் பொருட்களின் மதிப்பு பொதுவாக அனைவருக்கும் தெரிவதில்லை. மலிவு விலையில் அனைவரும் வாங்கக்கூடிய பழங்கலில் ஒன்று தர்பூசணி. இதில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள், கார்போஹைட்ரேட்டுகள், தாது ஹைட்ரேட்டுகள் உட்பட பல சத்துக்கள் உடலுக்குத் தேவையான உற்சாகத்தையும் ஆற்றலையும் அளிக்கின்றன. 

தர்பூசணிப் பழத்தின் பொதுவான பலன்கள் உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால், இதுவொரு இயற்கையான வயக்ரா என்பது தெரியுமா? நீண்ட நேர தாம்பத்தியம் அமைய காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தர்பூசணி ஜூஸ் (Fruit Juice) குடிப்பது நல்ல பலனளிக்கும்.

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு தீர்வு அளிக்க பயன்படுத்தப்படும் மருந்து வயாகரா, செயற்கையாக தயாரிக்கப்படுவது. இது ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, குறிப்பிட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை (Blood Circulation) அதிகரிக்கும். இதை இயற்கையாக செய்யும் தர்பூசணியை ஜூஸாக செய்துக் குடித்தால் தாம்பத்திய பிரச்சனைகளுக்கு இடமே இருக்காது.
 
தர்பூசணியில் சிட்ருலின் என்னும் அமினோ அமிலம் ஏராளமாக உள்ளது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கும். 

ALSO READ: தர்பூசணி சாப்பிட்ட பின் தோலை தூக்கி எறியாதீர்கள்; அதில் அவ்வ்வ்வளவு நன்மை இருக்கு

தர்பூசணிப் பழத்தின் தோல்களை நீக்கி துண்டுகளாக்கிக் கொள்ளவும். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், தர்பூசணியின் தோல்களை நீக்கும்போது, அதில் உள்ள வெள்ளைப் பகுதியை முடிந்த அளவு வீணாக்காமல் எடுத்துக் கொள்ளவும். அதில்தான் அதிக சத்து உள்ளது.

பிறகு துண்டுகளாக்கப்பட்ட தர்பூசணியை அரைத்து சாறு எடுத்து, அதை அடுப்பில் ஏற்றி சிறிது நேரம் கொதிக்க வைக்கவும். சாறு பாதியாக வற்ற வேண்டும். பிறகு இந்த சாற்றில் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். 

இந்தக் கலவையை கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஈரப்பதமில்லாத இடத்தில் வைத்துப் பராமரிக்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது. இந்த பானத்தை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 2 தேக்கரண்டி சாப்பிடவும். அதேபோல், இரவில் படுக்கும் முன் 2 தேக்கரண்டி சாப்பிடவும்.

இந்த நேச்சுரல் வயாகராவில் சுவைக்காகவோ, மணத்துக்காவோ சர்க்கரையோ அல்லது தேனையோ தப்பித்தவறியும் சேர்க்க வேண்டாம். சுவை முக்கியமா? அல்லது பலன் முக்கியமா?  பக்கவிளைவுகள் ஏதுமே இல்லாத இயற்கையான வயாகரா பானம் இது.  

Also Read | இந்த வகையில் தர்பூசணியை ஜூஸாக செய்து பருகவும். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News