உங்கள் குழந்தை ஆக்டிவாக இல்லையா? ‘இந்த’ யோகாசனங்கள் செய்தால் சுட்டியா மாறிடுவாங்க..

Yoga Asanas For Child's Laziness : சில குழந்தைகள் சிறு வயதிலேயே மிகவும் சோம்பேறி தனமாக இருப்பார்கள் அவர்களை ஆக்டிவாக மாற்றுவதற்கு சில யோகாசனங்கள் உள்ளன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 4, 2024, 12:07 PM IST
  • குழந்தைகளின் சோம்பேறித்தனத்தை ஒழித்துக்கட்டும் யோகாசனங்கள்
  • இதை பெரியவர்களும் செய்யலாம்
  • முழு செயல்முறை, இதோ
உங்கள் குழந்தை ஆக்டிவாக இல்லையா? ‘இந்த’ யோகாசனங்கள் செய்தால் சுட்டியா மாறிடுவாங்க.. title=

Yoga Asanas For Child's Laziness : குழந்தைகள் என்றாலே அவர்கள் சுட்டியாக இருக்க வேண்டும் என்று பலர் விரும்புகின்றனர். இயல்பாக, குழந்தைகளின் குணாதிசயமே சுட்டியாக, துறுதுறுவென இருப்பதுதான் என்று பலரும் கருத்துகளை கூறுகின்றனர். ஆனால், இயல்பாக ஒரு சில குழந்தைகள் அப்படி இருப்பதில்லை. சில பிள்ளைகள், நன்றாக ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டும், தூங்கி கொண்டும் சோம்பேறித்தனத்தால் ஆட்கொள்ளப்படுகின்றனர். 

கையில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்கள் கொடுப்பதற்கு முன்னர், பல குழந்தைகள் நன்கு ஓடி ஆடி விளையாடிக்கொண்டுதான் இருந்தனர். குறிப்பாக, 2019-2022ஆம் ஆண்டு வரை உலகையே தாக்கிய கொராேனா பெருநோயின் போது, அனைவரும் வீட்டிற்குள் முடக்கி வைக்கப்பட்டார்கள். அப்போது, வெளியில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் கூட செல்போனுக்கு அடிமையாகி விட்டனர். இதனால், சிறு குழந்தைகளை ஆட்கொள்ளக்கூடாத சோம்பேறித்தனம் ஆட்கொண்டு விட்டது. இதை போக்க, பல்வேறு முயற்சிகள் உள்ளன. இருப்பினும், யோகாசனங்கள் செய்வது இதற்கு பெரிய பலன் அளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த யோகாசனங்கள் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் செய்யலாம். 

சிறுவர்களை துறுதுறுவென வைத்துக்கொள்ளும் யோகாசனங்களின் லிஸ்டை இங்கு பார்ப்போம். 

Balasana

பாலாசனா:

பாலாசனா ஆசனத்தை ஆங்கிலத்தில் Child's Pose என்று கூறுவர். இந்த ஆசனத்தை, இதுவரை யோகாசனம் செய்யாமல் புதிதாக செய்ய தொடங்குபவர்கள் செய்து பழகலாம். இந்த ஆசனம் மனதையும் உடலையும் சாந்தப்படுத்த உதவுகிறது. முதுகு வலி, பின்பகுதியில் ஏற்படும் வலி, இடுப்பு வலி ஆகியவற்றில் இருந்து இந்த ஆசனத்தால் விடுதலை ஏற்படும். 

இதை எப்படி செய்ய வேண்டும்?

>மெத்தை அல்லது தரையில் மண்டியிட்டு அமர வேண்டும்

>உங்கள் உடற்பகுதியை முன்நோக்கி செலுத்தி உங்கள் தோள்களையும் கைகளையும் உங்களுக்கு முன்னால் கொண்டு வாருங்கள்.

>இந்த போஸில் சில நிமிடங்கள் அப்படியே இருந்து மூச்சை இழுத்து விட வேண்டும். 

supta padangusthasana

சுப்த பத்தா கோனாசனா:

இந்த யோகாசனத்தால் பிசிஓஎஸ் எனும் மாதவிடாய் கோளாறு காரணமாக அவதிப்படும் பெண்கள் அதிலிருந்து விடுபட வாய்ப்புள்ளது. கருவுற்றிருக்கும் பெண்களுக்கும் இந்த ஆசனம் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. இந்த ஆசனம், கவனச்சிதறல் ஏற்படாமல் தடுகவும், மனதை அமைதிப்படுத்தவும் உதவுகிறது. மேலும், குழந்தைகள் ஆக்டிவாக இருக்கவும் உதவி புரிகிறது.

இதை எப்படி செய்ய வேண்டும்?

>உங்கள் முதுகு பகுதியில் படுத்து கள் கால்கள் ஒன்றோடொன்று தொடும் வகையில் உங்கள் முழங்கால்களை மெதுவாக வளைக்கவும்.

>இதை செய்த பின், ஆழமாக மூச்சை இழுத்து விடவும். 

>இதை செய்கையில் கைகளை தலைக்கு மேல் நீளமாக உயர்த்தவும் செய்யலாம், அல்லது இரு பக்கங்களிலும் விரித்து வைத்துக்கொள்ளலாம். 

>இந்த ஆசனம், இடுப்பு, பிறப்புறுப்பு பகுதி, முட்டி மற்றும் தொடை பகுதிகளை விரிவடைய செய்யும். 

மேலும் படிக்க | நினைவாற்றலை அதிகரிக்கும் யோகாசனங்கள்! மறதியை மறக்க இந்த ஆசனங்களை செய்யலாம்!

viparita karani

விபரீத காரணி:

விபரீத காரணி என்ற இந்த ஆசனத்தை செய்வதால் கீழ் முதுகில் ஏற்படும் வலியை குறைக்கலாம். அதே போல் பாதங்கள், கால்கள் மற்றும் இடுப்புகளில் ஏற்படும் தசைகளை குறைக்க இந்த ஆசனம் உதவுமாம். சோர்வு உணர்வுகளை நீக்கவும் இந்த ஆசனம் உதவுகிறது. கணுக்கால் வீங்குவது, கால் வீக்கம் ஆகியவற்றால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆசனம் நன்மை பயக்கும். 

எப்படி செய்ய வேண்டும்? 

>இந்த யோகாசனத்தை செய்வதற்கு முன்பு, உங்கள் படுக்கையா சுவருக்கு அருகில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

>படுக்கையில் படுத்துக்கொண்டு கால்கலை சுவறு பக்கமகா தூக்க வேண்டும்

>தூக்கிய பின்பு நன்றாக மூச்சை இழுத்து விடவும். 

bhujangasana

புஜங்காசனம்:

இந்த ஆசனம் பின்பகுதியில் ஏற்படும் வலிகளை நீக்க உதவும். மார்பு பகுதி, வயிற்றுப்பகுதி மற்றும் தோள்பட்டை பகுதியில் இருக்கும் தசைகளை இந்த ஆசனம் நீட்டிக்க உதவுகிறது. இதனால் உடலில் ஏற்படும் சோர்வுணர்வு நீங்கும். 

இதை எப்படி செய்ய வேண்டும்? 

>வயிற்று பக்கமாக தரையில் படுக்க வேண்டும்,
>கைகளை முன்னாள் நீட்ட வேண்டும்.
>உடலை நன்றாக நீட்டி, உடலின் மேற்பகுதி மேல்நோக்கி எழும்புவது போல எழ வேண்டும். 
>கைகள் இரு பக்கங்களிலும் இருக்க வேண்டும். 
>இந்த நிலையில் சில நிமிடங்கள் மூச்சினை இழுத்து விட வேண்டும். 

மேலும் படிக்க | பச்சை தக்காளியில் இத்தனை நன்மைகளா... இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News