8th Pay Commission வருமா வராதா? நிதி அமைச்சகம் அளித்த லேட்டஸ்ட் அப்டேட்

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. 8வது ஊதியக்கமிஷன் விரைவில் அமலுக்கு வரும் என அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது ஆட்டம் கண்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 7, 2024, 01:12 PM IST
  • 8வது ஊதியக்குழு வருமா வராதா?
  • இது குறித்து மாநிலங்களவையில் கூறப்பட்டது என்ன?
  • இந்த விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
8th Pay Commission வருமா வராதா? நிதி அமைச்சகம் அளித்த லேட்டஸ்ட் அப்டேட்

8வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வந்துள்ளது. 8வது ஊதியக்கமிஷன் விரைவில் அமலுக்கு வரும் என அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை தற்போது ஆட்டம் கண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 8வது உதியக்குழு அமைப்பது குறித்த கேள்விக்கு நிதி அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலால் மத்திய அரசு ஊழியர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். 8வது ஊதியக்குழு வருமா வராதா? இது குறித்து மாநிலங்களவையில் கூறப்பட்டது என்ன? இந்த விவரங்களை இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Add Zee News as a Preferred Source

நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவை எம்பி ராம்நாத் தாக்கூர் 8வது ஊதியக்குழு பற்றிய கேள்வியை எழுப்பினார். எட்டாவது மத்திய ஊதியக் குழுவை (8th Pay Commission) அரசு ஏன் அமைக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பிய எம்பி, அடுத்த ஊதியக்கமிஷனுக்கான நிதி பளுவை அரசாங்கத்தால் தாங்க முடியாது என்பதால், அதை அமைப்பதற்கான முன்மொழிவு எதுவும் பரிசீலிக்கப்படவில்லையா என்று கேட்டார். 

இதற்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "இதுபோன்ற திட்டம் எதுவும் இப்போது பரிசீலனையில் இல்லை" என்று கூறினார். மேலும் 7வது ஊதியக்குழுவின் (7th Pay Commission) பரிந்துரைகளின் 1.22 ஆவது பிரிவை அமல்படுத்துவது குறித்த எந்த வித விவாதங்களையும் மத்திய அரசு நடத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அதாவது மாநிலங்களவையில் 8வது ஊதியக்குழு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிதித்துறை இணையமைச்சர், அதற்கான காரணத்தை விவரிக்காமல், தற்போதைக்கு அத்தகைய திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று மட்டும் தனது பதிலில் குறிப்பிட்டார். 

பணவீக்கம், விலைவாசி ஆகியவை மக்களை பாடாய் படுத்தி வருகின்றன. மக்கள் இவற்றை சமாளிக்க ஊதிய உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, அடுத்த ஊதியக்குழு அமைக்கப்பட்டு, அமலுக்கு வந்தால், நல்ல சம்பள உயர்வு (Salary Hike) இருக்கும். 7வது ஊதியக்குழு அறிக்கையின் 1.22 ஆவது பிரிவில் விவரிக்கப்பட்டுள்ள விவரங்களின் படி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை (Fitment Factor) மதிப்பாய்வு செய்ய பரிந்துரைக்கப்படுகின்றது. ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம் ஏற்பட்டால், அதன் மூலம் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டு ஊழியர்களின் மொத்த சம்பளம் அதிகரிக்கும். எனினும், அப்படிப்பட்ட எந்த பரிந்துரையும் தற்போது செய்யப்படவில்லை என மத்திய அரசு (Central Government) கூறிவிட்டது.

மேலும் படிக்க | வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. FD வட்டியை உயர்த்திய 2 பிரபல வங்கிகள்

8வது ஊதியக்குழு அமைப்பது பற்றிய எந்த அலோசனையும் தற்போது இல்லை என்று அரசு சார்பில் மாநிலங்களவையில் (Rajya Sabha) தெரிவிக்கபட்டாலும், பொருளாதார நிபுணர்கள் இது குறித்து வேறு ஒரு கருத்தையும் வெளியிட்டுள்ளனர். அரசு தற்பொது இதை மறுத்தாலும், சரியான நேரத்தில், இதை ஒரு இன்ப அதிர்ச்சியாக அரசு ஊழியர்களுக்கு வழங்கக்கூடும் என சிலர் கருதுகிறார்கள். அந்த சரியான நேரம் தேர்தல் நேரமாகவும் இருக்கலாம் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது. எனினும், சிலரோ தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் அடுத்த ஊதியக் குழுவை அமல்படுத்துவது அரசின் சுமையை அதிகரிக்கும் என்பதால் அரசு இதற்கு தயங்குவதாகவும் கூறுகிறார்கள். 

8th Pay Commission: மாற்றங்கள் வரக்கூடும் 

8வது ஊதியக்குழுவை உருவாக்க அரசு தாமதம் காட்டுவதில் மற்றொரு காரணமும் இருப்பதாத் தெரிகிறது. ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் ஊதியக்கமிஷனின் செயல்முறைகளில் சில மாற்றங்களை கொண்டு வருவது பற்றி அரசு சிந்தித்து வருகிறது. இவை தெளிவானவுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அரசு அறிவிக்கக்கூடும். தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள திருத்தம் செய்யப்படுகின்றது. இதற்கு பதிலாக ஊழியர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் (Central Government Employees) சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஒரு செயல்முறை வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 7வது ஊதியக் குழுவிலேயே இந்த மாற்றங்கள் பற்றி பரிந்துரைக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல், சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் மற்றொரு மாற்று முறை பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றது. 

மேலும் படிக்க | ரூ.20000 வரை கடன் தரும் ஜிபே! கடனுக்கு வட்டி எவ்வளவு? குறைந்தபட்ச தவணை மிகக்குறைவு...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News