பிஹார் சாலை விபத்தில் 9 மாணவர்கள் பலி!

பிஹார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பள்ளி கட்டிடம் மீது வாகனம் ஒன்று மோதியதில் 9 மாணவர்கள் பலியாகினர்!

Last Updated : Feb 24, 2018, 08:18 PM IST
பிஹார் சாலை விபத்தில் 9 மாணவர்கள் பலி! title=

முஸாபர்பூர்: பிஹார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பள்ளி கட்டிடம் மீது வாகனம் ஒன்று மோதியதில் 9 மாணவர்கள் பலியாகினர்!

இன்று மதியம் ஏற்பட்ட இந்த விபத்தில் சுமார் 24 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர் எனவும், 9 மாணவர்கள் பலியாகினர் எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவமானது பிஹார் மாநிலம் அவியாபூர் பகுதியின் அரசு பள்ளியில் அருகில் நிகழ்ந்துள்ளது. பள்ளி விடும் நேரத்தில் அவ்வழியே வந்த மகேந்திரா பொளேரோ ஒன்று பள்ளி மாணவர்களின் மீது மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அருகில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் என பிஹார் மாநில அரசு அறிவித்துள்ளது!

Trending News