இனி ரயில்களில் இருக்காது pantry car, அந்த இடத்தில் என்ன இருக்கும் தெரியுமா?

சுமார் 300 ரயில்களில் பேண்ட்ரி காரை அகற்ற ரயில்வே அமைச்சகம் தயாராகி வருகிறது. இந்த Pantry Car –களுக்கு பதிலாக Third AC Coach-கள் அமைக்கப்படும்.

Written by - ZEE Bureau | Last Updated : Oct 19, 2020, 03:19 PM IST
  • சுமார் 300 ரயில்களில் பேண்ட்ரி காரை அகற்ற ரயில்வே அமைச்சகம் தயாராகி வருகிறது.
  • இந்த திட்டத்தின் மூலம், ரயில்வே ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளை அடைய விரும்புகிறது.
  • Third AC பெட்டிகள் மூலம் ரயில்வே தனது வருவாயை அதிகரிக்க முடியும்.
இனி ரயில்களில் இருக்காது pantry car, அந்த இடத்தில் என்ன இருக்கும் தெரியுமா?

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, தற்போது, இந்திய ரயில்வேயின் சிறப்பு ரயில்களில் பயணிக்கும்போது உணவு பரிமாறப்படுவதில்லை. அதுமட்டுமல்லாமல், பயணிகளுக்கு பெட்ஷீட், தலையணைகள் ஆகியவையும் வழங்கப்படுவதில்லை. ஆனால் விரைவில் ரயில்வே இந்த முறையை புதிய இயல்பின் கீழ் பின்பற்றப் போகிறது. வரும் நாட்களில், இந்த ஏற்பாடு வேறு வழியில் நிரந்தரமாக செய்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரயில்வே ஏற்பாடுகளை செய்து வருகிறது

ரயில் சீர்திருத்தத்தின் கீழ் விரைவில் ரயில்களில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த இந்திய ரயில்வே (Indian Railways) தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் கீழ் சுமார் 300 ரயில்களில் பேண்ட்ரி காரை (Pantry Car) அகற்ற ரயில்வே அமைச்சகம் தயாராகி வருகிறது. இந்த Pantry Car –களுக்கு பதிலாக Third AC Coach-கள் அமைக்கப்படும். இதனால் பயணிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட இருக்கை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், ரயில் பயணிகள் கட்டணத்திலிருந்து ரயில்வேக்கு வருவாயும் அதிகரிக்கும்.

ALSO READ: ரயில் பயணங்கள் இனி Costly ஆகலாம்: காரணம் என்ன? தெரிந்துகொள்ளலாம்!!

Pantry Car-களின் பயன்பாடு

ரயில்களில் உள்ள Pantry Car ரயில் வண்டிகளின் சமையலறை போன்றது. இங்கு, பயணிகளுக்கு உணவு தயாரிக்கப்படுவதோடு, வெளியிருந்து பெறப்படும் உணவும், இங்கிருந்துதான் பயணத்தின் போது பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. இப்போது ரயில்வே பயணிகளுக்கு உணவு வழங்க இந்த்கியன் ரயில்வே தனி அமைப்பைத் தயாரித்து வருகிறது.

இந்த வழியில் இனி ரயிலில் உணவு கிடைக்கும்

பயணத்தின் போது பயணிகளுக்கு உணவு வழங்குவதற்காக, ரயில்வே கேட்டரிங் செய்வதற்காக, இந்திய ரயில்வே பெரிய ரயில் நிலையங்களுக்கு அருகில், IRCTC-யால் இயக்கப்படும் அடிப்படை சமையலறைகளை உருவாக்கி வருகிறது. இவற்றின் மூலம் இனி ரயில்களில் உணவு கிடைக்கும், Pantry Car-கள் அகற்றப்படும்.

இது மட்டுமல்லாமல், பயணிகளுக்கு ரயிலில் இ-கேட்டரிங் அல்லது ஆன்லைநில் உணவை ஆர்டர் செய்வதற்கான வசதியும் வழங்கப்படும்.

ரயில்வேயின் திட்டமிடல்

இந்த திட்டத்தின் மூலம், ரயில்வே ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளை அடைய விரும்புகிறது. Third AC பெட்டிகள் (Third AC Coach) மூலம் ரயில்வே தனது வருவாயை அதிகரிக்க முடியும், மறுபுறம், ரயில்வே eCatering-ஐயும் விரிவுபடுத்த விரும்புகிறது. ஆதாரங்கள் படி, எந்தவொரு தவறும் தடையும் இல்லாமல் மௌனமாக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முனைப்போடு ரயில்வே செயல்பட்டு வருகிறது. 

ALSO READ: சூரியசக்தியில் இயக்கும் ரயில்கள்... இந்தியன் ரயில்வேயின் Wow திட்டம்..!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News