இமாச்சல பிரதேச முதல்வர் மீது சொத்து குவிப்பு புகார்

Last Updated : Apr 1, 2017, 10:03 AM IST
இமாச்சல பிரதேச முதல்வர் மீது சொத்து குவிப்பு புகார் title=

இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங் மற்றும் அவரது மனைவி மீது சொத்து குவிப்பு புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் டெல்லி சிறப்பு கோர்ட்டில் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருவர் மீதும் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கும், கைது செய்யவும் இடைக்கால தடை விதிக்கக்கோரி வீரபத்ர சிங் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவில் சிபிஐ-க்கு எந்த தடையும் விதிக்க முடியாது என ஐகோர்ட்டு கூறியிருந்தது.

வீரபத்ர சிங் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா? என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கண்டிப்பாக இல்லை என்று கூறினார்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரபத்ர சிங், இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்தோடு தொடரப்பட்ட வழக்கு என்பதை நிரூபித்து, அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்து போராடுவேன். இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும். மக்களின் நம்பிக்கையும் அனுதாபமும் தனக்கு இருக்கிறது என்றார்.

Trending News