தன்பாலின திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை: மத்திய அரசு

Same-Sex Marriage: தன்பாலின திருமணம்: நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமை விசாரிக்கிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2023, 05:24 PM IST
  • தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூகத்தினரை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது.
  • ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக செல்லுபடியாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு.
  • கிராமப்புற மக்கள், சிறிய நகரங்களில் வாழும் மக்களின் கருத்துகள், அனைத்து மத சமூகங்களின் பார்வைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
தன்பாலின திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை: மத்திய அரசு title=

நாட்டில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரும் மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமை விசாரிக்க உள்ள நிலையில், தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது என்பது நகர்ப்புறத்தில் வாழும் உயரடுக்கு மக்களின் கருத்து என்றும் நீதிமன்றம் இதனை அனுமதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரும் மனுக்கள் 'நகர்ப்புற உயரடுக்கு மக்களின்' கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றன என்றும்,  அதை நீதிமன்றங்கள் இதனை அனுமதிக்க கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களை ஆதரிப்பதன் மூலம் ஒரு புதிய சமூகத்தினரை உருவாக்க நீதிமன்றம் முயலக் கூடாது. நீதிபதிகள் இந்தப் பணியை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். இதுபோன்ற 'வேறு வகை' திருமணங்களை சமூக ரீதியாகவும், மத ரீதியாகவும் ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து மக்கள் முடிவு செய்வார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய அரசு இது குறித்து மேலும் கூறுகையில், “கிராமப்புற மக்கள் மற்றும் சிறிய நகரங்களில் வாழும் மக்களின் கருத்துகள்,  அனைத்து மத சமூகங்களின் பார்வைகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். தனிப்பட்ட சட்டங்கள், பழக்கவழக்கங்கள், மற்ற திருமண முறைகள் மீது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் ஏற்படுத்தும் விளைவுகளையும்  மனதில் கொள்ள வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | பள்ளி மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்கள்... மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை சட்டப்பூர்வமாக செல்லுபடியாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் மத்திய அரசு இதனைத் தெரிவித்துள்ளது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணங்களுக்கு சட்ட ரீதியாக அங்கீகாரம் அளிக்கும் விவகாரம் குறித்து முடிவு எடுப்பதை அதற்கான சட்டமன்றம் / நாடாளுமன்றம் மட்டுமே செய்யப்பட முடியும். நீதித்துறை தீர்ப்பால் அல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு செவ்வாய்கிழமை விசாரிக்கவுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி எஸ். கே கவுல், நீதிபதி எஸ். ரவீந்திர பட், நீதிபதி பி.எஸ். நரசிம்ஹா மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை ஏப்ரல் 18ஆம் தேதி விசாரிக்கும். உச்ச நீதிமன்றம் மார்ச் 13 அன்று இந்த மனுக்களை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, இந்த பிரச்சினை "அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தது" என்று கூறியது. சாதாரண குடிமக்களும் அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தில் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இந்த வழக்கின் விசாரணை மற்றும் தீர்ப்பு நாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | தன்பாலினத்தவர் குழந்தைகளை தத்தெடுப்பது பெரும் பாதிப்பை உண்டாக்கும்: NCPCR

மேலும் படிக்க | இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு ஜாக்பாட், இனி இந்த அசத்தல் பலன் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News