சந்திரயான் 2 விண்கலம் புவியின் நான்காவது வட்டப்பாதையை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலாவின் தென்பகுதியை ஆராய்ச்சி செய்ய சந்திரயான்-1 திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்யும் சந்திரயான் 2 திட்டத்துக்கான பணிகள் தொடங்கின. கடந்த 15ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்த சந்திரயான்-2 விண்கலம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு, கடந்த 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலன் விண்ணில் பாய்ந்தது.
புவி வட்டப் பாதையில் இயங்கி வரும் விண்கலத்தின் உயரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த 24 ஆம் தேதி முதல் வட்டப்பாதையை கடந்தது. இதனையடுத்து ஜூலை 26 ஆம் தேதி இரண்டாவது வட்டப்பாதையையும், ஜூலை 29 ஆம் தேதி மூன்றாவது வட்டப்பாதையை வெற்றிக்கரமாக கடந்தது. இந்தப் பணிகள் வெற்றிகரமாக நடந்ததாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து, இன்று புவியின் நான்காம் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 2 விண்கலம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. மாலை 3.27 மணிக்கு 4வது புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக சந்திரயான் 2 விண்கலம் கடந்தது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
#Chandrayaan2
Today marks the successful completion of the fourth orbit raising maneuver. The last Earth bound maneuver is planned on August 6, 2019#ISRO pic.twitter.com/45jy83UCrP— ISRO (@isro) August 2, 2019