எல்லை பிரச்சனை; கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரதமர் இன்று உரையாற்றுவார்

பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jun 30, 2020, 08:27 AM IST
எல்லை பிரச்சனை; கொரோனா நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரதமர் இன்று உரையாற்றுவார்
Photo: ANI

புது டெல்லி: கிழக்கு லடாக்கில் சீனாவுடனான (China) தொடரும் மோதல், அன்லாக் இரண்டாம் கட்டத்திற்குள் (Unlock 2 ) நாடு நுழையும், இந்த சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுடன் உரையாற்றவுள்ளார்.

அவரது மாதாந்திர மன் கி பாத் (Mann ki Baat) வானொலி நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, மீண்டும் நேரடியாக மக்களுடன் பேச உள்ளார். முன்னதாக மன் கி பாத் நிகழ்சியில் நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும் பொருளாதாரம் மீண்டும் செயல்பாட்டுக்கு குடிமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

கால்வான் பள்ளத்தாக்கில் (Galwan valley) ஜூன் 15 ம் தேதி சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட 20 இந்திய வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தியிருந்தார். "இந்தியாவின் பகுதியான லடாக்கில் தீய கண் வைத்திருப்பவர்களுக்கு தக்க பதிலடி கிடைத்துள்ளது" என்று அவர் கூறினார்.

READ | பதிலடி கொடுக்க நேரம் வந்துவிட்டது!! டிராகன் சீனாவை எதிர்கொள்ள PM Modi Master Plan

READ | Border Clash சீன இராணுவம் நமது எல்லைக்குள் நுழையவில்லை: பிரதமர் மோடி

ஒருபக்கம் எல்லையில் மோதல், மறுபக்கம் நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்கம் என்ற சூழலில் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதனால் இன்றைய உரையில் அவர் சீனாவுடனான சில முடிவுகளை குறித்து நாட்டு மக்களிடம் பேசுவார் எனத் தெரிகிறது. 

மாலை 4 மணிக்கு பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றுகிறார் என்பதை நேற்று இரவு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.