நாக்பூர் நபரின் வீட்டுக்கு வந்த கொரியர் பார்சலில் பாம்பு இருந்துள்ளது. பார்சலை பிரித்ததும் பார்சல் பெட்டியிலிருந்து நாகம் தலையைத் தூக்கி படம் எடுத்து ஆடியுள்ளது. சமூக வலைத்தளத்தில் பார்சலில் வந்த பாம்பின் வீடியோ வைரல் ஆனது.
இந்த சம்பவம் நாக்பூரில் (Nagpur) உள்ள தியானேஷ்வர் நகரில் வசிக்கும் சுனில் லகேதே என்பவருக்கு நேர்ந்த்து. உண்மையில், எட்டு பெட்டிகள் பெங்களூரில் இருந்து ஒரு பிரபலமான கொரியர் நிறுவனம் மூலம் சுனிலின் வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்டது. இந்த பெட்டிகளில் பெங்களூரு நிறுவனத்தில் பணிபுரியும் சுனில் லகேதேவின் மகளின் உடைமைகள் இருந்தன.
ALSO READ: Viral News: அனைவரையும் கவர்ந்த ₹1 கோடி மதிப்பிலான 'ஹள்ளிகார்' காளை..!!!
சுனில் லக்கேத்தின் மகள் நாக்பூரில் இருந்து பல நாட்களாக வீட்டில் இருந்து வேலை செய்து வந்ததால் பெங்களூர் வீட்டை காலி செய்துவிட்டு, அவரது பொருட்களை கொரியர் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்டது. எட்டு பெட்டிகளில் நிரப்பப்பட்ட பொருட்கள் சுனிலின் வீட்டை அடைந்தன.
ஒவ்வொன்றாக திறந்து பார்த்தபோது நான்காவது பெட்டியில் பாம்பு (Snakes) சீறும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தம் கேட்டதும் அங்கிருந்தவர்கள் பீதியடைந்தனர். சிறிது நேரம் கழித்து அதிலிருந்து வெளியே வந்த நாகப்பாம்பு ஒன்று வீட்டின் அருகே உள்ள வாய்க்காலில் சென்றது. பாம்பை கண்டுபிடிக்க பாம்போட்டியை அவர்கள் அழைத்தார். இருப்பினும் அவர்களால் அந்த நாகப்பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.
அந்த பாம்பு வெளியே வந்த பெட்டியில் ஓட்டைகள் இருந்தன. அப்படிப்பட்ட நிலையில், பெங்களூரில் பேக்கிங் செய்த பின் அல்லது நாக்பூரில் உள்ள கொரியர் நிறுவனத்தின் குடோனில் பெட்டி கிடந்தபோது பாம்பு பெட்டிக்குள் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
ALSO READ: Viral Video: பார்பருக்கு பதில் மனைவியிடம் தலையை கொடுத்து மாட்டிக்கொண்ட கணவன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR