கொரோனா வைரஸ்: சீனா சென்றவர்கள் இந்தியாக்கு வர தடை?

ஜனவரி 15 அல்லது அதற்குப் பின் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Feb 9, 2020, 02:50 PM IST
கொரோனா வைரஸ்: சீனா சென்றவர்கள் இந்தியாக்கு வர தடை? title=

ஜனவரி 15 அல்லது அதற்குப் பின் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 811 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 86 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வந்தாலும், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அங்கு பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. சீனாவில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில்  774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுரவதைத் தடுக்கும் நோக்கில் ஜனவரி 15 அல்லது அதற்குப் பின் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5 முதல் சாதாரண விசா மட்டுமின்றி இ-விசா வழங்குவதும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த வழியிலும் இந்தியாவுக்கு வருவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

Trending News