கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்...

கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது என கர்நாடக அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்...!

Updated: Jul 8, 2020, 01:12 PM IST
கொரோனா சமூக பரவலாக மாறிவிட்டது என உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்...

கர்நாடகாவில் கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது கவலை அளிக்கிறது என கர்நாடக அமைச்சர் மதுசாமி தெரிவித்துள்ளார்...!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சுமார் 25,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். அதில், 14,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றால் 401 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,843 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. மேலும் தும்கூரில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்தார். அதாவது, அவர்களின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதால் நாங்கள் கவலை அடைந்துள்ளோம் என துமாகூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மதுசாமி ANI செய்தி நிறுவனத்திடம் அவர் கூறியுள்ளார். 

அதை கட்டுப்படுத்த முயற்சித்தாலும் மாவட்ட அதிகாரிகளுக்கு அது கடினமான கட்டத்தை எட்டியுள்ளது என கூறினார். மேலும், இங்கே நிலைமை கைமீறி சென்றுவிட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வந்தாலும் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

READ | COVID-19 காற்றின் மூலம் பரவுகிறது என்பதற்கான ஆதாரம் பெருகி வருகிறது: WHO

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கர்நாடகாவின் கொரோனா வைரஸ் பாதிப்பின் எண்ணிக்கை 25,000-யை தாண்டியுள்ளது, இறப்பு எண்ணிக்கை 400 ஆக உயர்ந்துள்ளது. ANI அறிக்கையின்படி, புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள மாவட்டங்கள் - பெங்களூரு நகர்ப்புற 981, பல்லாரி 99, உத்தர கன்னட 81, பெங்களூரு கிராமப்புற 68, தார்வாட் 56, கலாபுராகி 53, ஹாசன் 49, மைசூரு 45, பிதர் 44, உடுப்பி 40, மண்டியா 39 , விஜயபுரா 36, யத்கீர் 35, தட்சிணா கன்னட 34, பாகல்கோட் 33, துமகுரு 31, சிவமோகா 24, கடக் 18, சாமராஜனகர 12, ராமநகர 11.