நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு அறிவிப்பு

12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Last Updated : Mar 15, 2022, 03:00 PM IST
  • நாளை முதல் 12-14 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
  • கோர்பேவேக்ஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும்
  • தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய அரசு அறிக்கை
 நாளை முதல் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி..மத்திய அரசு அறிவிப்பு title=

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் சுகாதாரப்பணியாளர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்து 60 வயதை கடந்தவர்கள் மற்றும் 45 வயதை கடந்த இணைநோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 45 வயதை தாண்டிய அனைவருக்கும், 18 வயதை தாண்டியவர்களுக்கு கடந்த மே ஒன்றாம் தேதியில் இருந்தும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் 15 - 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 10-ம் தேதி முதல் சுகாதார, முன்களப் பணியாளர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 60 வயதை தாண்டியவர்களுக்கும், பூஸ்டர் தடுப்பூசி  போடப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க | CORBEVAX , COVOVAX தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அனுமதி..!!

12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. 12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஏ (DCGA)ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

union health secretary statement

 

2010-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டுமே, தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் எனவும் ,  இந்த வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட வேண்டும் எனவும்  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி செலுத்த வரும் சிறுவர்களுக்கு 12 வயது நிறைவடைந்துள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே, சுகாதாரப்பணியாளர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Biological-E தயாரிக்கும் Corbevax மற்ற தடுப்பூசிகளில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News