நாடு முழுவதும் கோவிட்-19 தொற்று பாதிப்புகள் திடீரென அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கோவிட்-19 4 வது அலை குறித்த அச்சம் எழுந்துள்ளது.
கோவிட் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா சிறப்பு கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. சிப்லா செவ்வாயன்று, Genes2Me பிரைவேட் லிமிடெட் நிருவனத்துடன் இணைந்து இந்த RT-PCR சோதனைக் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வெறும் 45 நிமிடங்களில் கொரோனா அறிக்கை
இந்தக் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள ஆர்டி டைரக்ட் சோதனை நெறிமுறையில் ஆர்என்ஏ பிரித்தெடுத்தல் செயல்முறை இல்லை. இதன் காரணமாக 45 நிமிடங்களுக்குள் முடிவு தெரிந்து விடும். RT-PCR சோதனையுடன் ஒப்பிடும்போது, இந்த கிட் சோதனையை விரைவுபடுத்துவதோடு ஆய்வகத்தின் சுமையையும் குறைக்கும்.
மேலும் படிக்க | இந்தியாவில் 4வது கோவிட் அலை உருவாகுமா; ஐஐடி பேராசிரியர் கூறுவது என்ன
ஐசிஎம்ஆர் அங்கீகாரம்
சிப்லா இப்போது இந்தியாவில் ஆர்டி - பிசிஆர் சோதனை கருவிகளை வணிக ரீதியாக விநியோகிக்க உள்ளது. இந்த கிட், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலால் (ஐசிஎம்ஆர்) அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2,288 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளில், தடுப்பூசி மற்றும் பரிசோதனை ஆகியவை தான் நான்காவது அலை மிக முக்கியமான நடவடிக்கைகளாகும்.
மேலும் படிக்க | 4-ஆம் அலை வேண்டாம் என்றால் மாஸ்க் வேண்டும்! பேரவையிலும் எதிரொலித்த மாஸ்க் விவகாரம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR