மதுபான கொள்கை முறைகேடு... தில்லி முதலமைச்சரிடம் CBI விசாரணை!

மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ கேள்விகளை எதிர்கொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 16, 2023, 12:16 PM IST
  • CBI மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
  • மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ கேள்விகளை எதிர்கொள்கிறார்.
  • புதிய மதுபான கொள்கை அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் பல 100 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு.
மதுபான கொள்கை முறைகேடு... தில்லி முதலமைச்சரிடம் CBI விசாரணை! title=

தில்லி ஆம் ஆத்மி அரசு கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய மதுபான கொள்கையை அமல்படுத்திய நிலையில், அதன் மூலம் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறிப்பாக 849 மதுபான கடைகளுக்கு புதிய மதுபான கொள்கை அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டதில் பல 100 கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆம்ஆத்மி அரசு அறிவித்தது என்றாலும் மதுபான கொள்கையில் நடந்த முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

இதனை அடுத்து CBI மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். புதிய மதுபான கொள்கை மூலம் முறைகேடாக சம்பாதித்த பணத்தை தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதாகவும் குற்றசாட்டு வைக்கப்பட்டுள்ளது. முறைகேடாக பெற்ற பணத்தில் ரூபாய் 100 கோடியை கோவா தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி பயன்படுத்தியதாக விசாரணையின் தெரியவந்தது. இதனை அடுத்து புதிய மதுபானக்கொள்கையை அறிவித்த ஆம்ஆத்மி அரசின் துணை முதலமைச்சர் மனீஷ் சிசோடியா பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் புதிய மதுபானக்கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை அடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை அவர் விசாரணைக்கு ஆஜராவதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் பஞ்சாப் முதலமைச்சர்  மற்றும் ஏராளமான ஆம்ஆத்மி கட்சியினர் உடன் சென்றனர். காரில் தில்லி சாலையில் அவர்கள் பிரம்மாண்ட ஊர்வலமாக சென்றனர்.

மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சிபிஐ கேள்விகளை எதிர்கொள்கிறார். ஞாயிற்றுக்கிழமை காலை தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

மேலும் படிக்க | டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்! கைது செய்ய சதித்திட்டம் -ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து தில்லியில் பல்வேறு இடங்களில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆம் ஆத்மி ஊழியர்களின் போராட்டத்தால் முக்கிய சாலைகள் சிலவற்றில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  சிபிஐ தலைமையகத்திலும், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்திற்கு வெளியேயும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முன்னதாக நேற்று, சிபிஜை விசாரணை குறித்து கூறிய அர்விந்த் கெஜ்ரிவால், தான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என தெரிவித்தார். “நாளை சிபிஐ அழைத்துள்ளது, நான் செல்கிறேன். பொய்யான ஆதாரங்களை உருவாக்கி, நீதிமன்றத்தில் பொய்யான சாட்சியத்தை அளித்ததற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வோம். கெஜ்ரிவால் ஒரு திருடன் மற்றும் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்பதை நான் பிரதமருக்குக் கூற விரும்புகிறேன்” என்றார்.

மேலும் படிக்க | உலகிலேயே உயர்ந்த மனிதர் டாக்டர் அம்பேத்கர்! 125 அடி உயர அம்பேத்கர் சிலை ஹைதராபாதில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News