ஜூன் முதல் உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்வு: விமான போக்குவரத்து அமைச்சகம்

கொரோனா முதலாவது அலை பாதிப்பு குறைய தொடங்கிய போது, விமான போக்குவரத்து சேவைகள் மீண்டு தொடங்கின. ஆனால், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக விமான போக்குவரத்து துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 29, 2021, 11:31 AM IST
  • உள்நாட்டு விமான கட்டணத்தின் குறைந்தபட்ச வரையறையை உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு.
  • கொரோனா முதலாவது அலை பாதிப்பு குறைய தொடங்கிய போது, விமான போக்குவரத்து சேவைகள் மீண்டு தொடங்கின.
  • ஆனால், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக விமான போக்குவரத்து துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் உள்நாட்டு விமான கட்டணங்கள் உயர்வு: விமான போக்குவரத்து அமைச்சகம் title=

கொரோனா பரவல் தொடங்கியதிலிந்து, பெரிதும் பாதிப்பிற்கு உள்ளான துறைகளில், விமான போக்குவரத்து துறையும் ஒன்று.  சென்ற ஆண்டு மார்ச் மாத இறுதியில்  முழுமையான லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில், விமான போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியதால், வருவாய் இழப்பு பெரிதும் ஏற்பட்டதால், நிறுவனங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டன. 

கொரோனா (Corona) முதலாவது அலை பாதிப்பு குறைய தொடங்கிய போது, விமான போக்குவரத்து சேவைகள் மீண்டு தொடங்கின. ஆனால், மீண்டும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக விமான போக்குவரத்து துறை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான போக்குவரத்து துறை நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில், உள்நாட்டு விமான போக்குவரத்து கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது.

ALSO READ | Petrol, Diesel Price (May 29): தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் விலைகள்..!!!

உள்நாட்டு விமான கட்டணத்தின் குறைந்தபட்ச வரையறையை உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதை அடுத்து வரும் ஜூன் மாதம் 1ம் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்திற்கான குறைந்தபட்ச வரையறை, 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக அதிகரிக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. எனினும், அதிகபட்ச வரையறையில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டால், 40 நிமிடத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்துக்கான கட்டணம் ரூ.2,300ல் இருந்து ரூ.2,600 ஆக உயரும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ | புதிய ஐடி விதிகளை கடைபிடிக்காமல் முரண்டு பிடிக்கும் ட்விட்டர்; அடுத்தது என்ன

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News