COVID: பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டங்கள்: நிர்மலா சீதாராமன்

கோவிட் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ .1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 28, 2021, 05:33 PM IST
  • ஆன்-சைட் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக ரூ .2 கோடி வரையிலான கடன்களுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் வழங்கப்பட்டது.
  • கடன் வரி உத்தரவாத திட்டத்தின் (ECLGS) கீழ் கூடுதலாக ரூ .1.5 லட்சம் கோடி நிதி உதவி.
  • விசா வழங்கல் மறுதொடக்கம் செய்யப்பட்ட பின்னர், முதல் 5 லட்சம் சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும்.
COVID: பாதிக்கப்பட்ட துறைகளுக்கு கடன் உத்தரவாத திட்டங்கள்: நிர்மலா சீதாராமன் title=

Finance Minister Relief Package: கோவிட் பாதிப்புக்குள்ளான துறைகளுக்கு ரூ .1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ .50,000 கோடி, மற்றொன்று மற்ற துறைகளுக்கான ரூ .60,000 கோடி .

இது தவிர, அவசர கடன் வரி உத்தரவாத திட்டத்தின் (ECLGS) கீழ் கூடுதலாக ரூ .1.5 லட்சம் கோடி நிதி உதவியை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப துறை வாரியாக விவரங்கள் வழங்கப்படும். இந்த கடன் உத்தரவாதத் திட்டம் எம்.எஃப்.ஐ-க்கள் மூலம் ரூ .1.25 லட்சம் முதல் 25 லட்சம் வரை கடன்களை வழங்க உதவும்.

கோவிட் 19 (COVID-19) ஆல் பாதிக்கப்பட்ட துறைகளுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் 11,000 க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டிகள் / பயண மற்றும் சுற்றுலா பங்குதாரர்களுக்கு நிதி உதவி வழங்குவதாக நிர்மலா சீதாராமன் மேலும் உறுதியளித்தார்.

விசா வழங்கல் மறுதொடக்கம் செய்யப்பட்ட பின்னர், முதல் 5 லட்சம் சுற்றுலா விசாக்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அறிவித்தார். தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம், அதாவது ஆத்மனிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா 2021 ஜூன் 30-லிருந்து மார்ச் 22, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Covishield: ஐயோப்பிய யூனியனுக்கு க்ரீன் பாஸ் மறுப்பு; மவுனம் கலைத்த SII

2020 மே மாதத்தில் ரூ .20 லட்சம் கோடி தற்சார்பு இந்தியா திட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட ஈ.சி.எல்.ஜி.எஸ் திட்டத்திற்கான தற்போதைய வரம்பு ரூ .3 லட்சம் ஆக இருந்தது. கடந்த மாதம், நிதி அமைச்சகம் ரூ .3 லட்சம் கோடி ஈ.சி.எல்.ஜி.எஸ்.-ஐ விரிவாக்கியது.  ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக மருத்துவமனைகளுக்கு சலுகைக் கடன்களும் இதில் சேர்க்கப்பட்டன. 

இது தவிர, இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் தன்மை மூன்று மாதங்களுக்கு, செப்டம்பர் 30 வரை, அல்லது, ரூ .3 லட்சம் கோடிக்கு உத்தரவாதம் வழங்கப்படும் வரை நீட்டிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதிக்கான கடைசி தேதி டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ECLGS 4.0 இன் கீழ், மருத்துவமனைகள் (Hospitals), நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகள், மருத்துவக் கல்லூரிகளுக்கு ஆன்-சைட் ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்காக ரூ .2 கோடி வரை கடன்களுக்கு 100 சதவீதம் உத்தரவாதம் வழங்கப்பட்டது.

இந்த கடன்களுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது வங்கிகள் இந்த உச்சவரம்பை விட குறைவாக கடன்களை வழங்க முடியும்.

ALSO READ: vaccination certificate: தடுப்பூசி சான்றிதழில் பாஸ்போர்ட் எண்ணை எப்படி சேர்ப்பது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News