சியாமா பிரசாத் இறப்பு குறித்து விசாரிக்க நேரு மறுத்துவிட்டாரா?

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பு குறித்து விசாரிக்க முன்னாள் பிரதமர் நேரு மறுத்துவிட்டதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி நட்டா குற்றம்சாட்டியுள்ளார்!

Last Updated : Jun 23, 2019, 08:01 PM IST
சியாமா பிரசாத் இறப்பு குறித்து விசாரிக்க நேரு மறுத்துவிட்டாரா? title=

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் இறப்பு குறித்து விசாரிக்க முன்னாள் பிரதமர் நேரு மறுத்துவிட்டதாக பாஜக செயல் தலைவர் ஜே.பி நட்டா குற்றம்சாட்டியுள்ளார்!

பாரதிய ஜனசங்கத்தின் நிறுவனரான டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சியாமா பிரசாத்தின் உருவப் படத்துக்கு தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் தொண்டர்களிடம் பேசிய பாஜக செயல் தலைவர் ஜே.பி நட்டா தெரிவிக்கையில்., ஷியாமா பிரசாத் முகர்ஜி மறைவு குறித்து நாங்கள் அப்போது விசாரணாக்கு உத்தரவிடக் கோரி அப்போதைய பிரதம்ர ஜவர்லால் நேருவிடம் முறையிட்டோம். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் என ஜே.பி நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த 1953-ஆம் ஆண்டு மே 11-ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குள் அனுமதியின்றி நுழைய முயன்றதாக முகர்ஜி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூன் 23-ஆம் நாள் இறந்தார் எனவும் குறிப்பிட்ட நட்டா., அவரின் தியாகத்தையும், புகழையும் யாராலும் மறைக்க முடியாது எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதேபோல், சியாமா பிரசாத் முகர்ஜியின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிடுகையில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி ஒரு தீவிர தேசபக்தர். சிறந்த தேசியவாதி, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என பதிவிட்டுள்ளார்.

Trending News