இன்று நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள். உலகில் அவ்வப்போது சில உன்னத மாணிக்கங்கள் பிறப்பதுண்டு. அப்படி பிறக்கும் சிலர் தங்கள் உயரிய எண்ணங்களாலும், எடுத்துக்காட்டான வாழ்க்கை முறைகளாலும், கடைபிடிக்கும் நற்பண்புகளாலும் உலக மக்களை பெரும் அளவில் ஈர்த்து விடுகிறார்கள். அப்படி, ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியால் தன் வசம் பல மனிதர்களை இழுத்த ஒரு மகான் மகாத்மா காந்தி அவர்கள்.
காந்தியடிகள் நம் மண்ணில் பிறந்தது நம் மண் செய்த புண்ணியம் என்றுதான் கூறவேண்டும். வெளிநாடு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றாலும், சொந்த நாடு அடிமையாய் அவதிப்படுவதைத் தாங்க முடியாமல் அனைத்து வசதிகளையும் விட்டு விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். பல பேரணிகளையும், வன்முறைப் போராட்டங்களையும் கண்டும் அஞ்சாத ஆங்கிலேய ஆட்சி காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்தைக் கண்டு ஆடிப்போனது.
வன்முறையில் வலிமை இல்லை, அகிம்சையில் அசைக்க முடியாத உறுதி உள்ளது என இந்திய மக்களுக்கும், உலக மக்களுக்கும் புரிய வைத்தார் மகாத்மா காந்தியடிகள் (Mahatma Gandhi).
இன்று நாம் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசுகிறோம். ஆனால், அன்றே அதற்கு குரல் கொடுத்தவர் அவர்.
மகாத்மா காந்தி, நர்சி மேத்தாவின் குஜராத்தி மொழியில் எழுதப்பட்ட பல பாடல்களைப் பாடுவார். குறிப்பாக, அவருக்கு 'வைணவ்ஜன்' உடன் ஆழமான தொடர்பு இருந்தது. அவர் இந்த பஜனையை மிகவும் நேசித்தார். அதே நேரத்தில் பாபு 'ரகுபதி ராகவ ராஜா ராம்' என்ற பாடலையும் அடிக்கடி பாடுவார். நர்சி மேத்தாவின் 'வைணவஜன்' பாடலை காஷ்மீர் மொழியில் மொழிபெயர்த்த பிறகு, இன்று ஒரு காஷ்மீர் மகளின் கனவு நிறைவேறியுள்ளது.
காஷ்மீர் பெண் மொழிபெயர்ப்பு செய்தார்
காந்தியடிகளின் இதயத்திற்கு மிக நெருக்கமாக இந்த பஜனை காஷ்மீரின் மகள் குசும் கௌல் வ்யாஸ் (Kusum Kaul Vyas) என்பவர் மொழிபெயர்த்தார். அவர் காஷ்மீரி பாடல் மற்றும் இசை ஆகியவற்றில் ஆர்வமும் திறமையும் படைத்தவர். காந்தி ஜெயந்தியின் சந்தர்ப்பத்தில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இது அர்ப்பணிக்கப்பட்டது.
90 களில் பயங்கரவாதம் காரணமாக காஷ்மீரில் இருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்த காஷ்மீர் பண்டிட் குடும்பங்களில் குசும் கவுல் வியாஸ் ஒருவராக இருந்தார். காஷ்மீரில் நடந்த இரத்தக்களரியால் திசைதிருப்பப்பட்ட குசும் கவுல் பியாஸ், குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள தனது மாமியார் வீட்டிலும் பாபுவுக்கு பிடித்த பாடல்களை அடிக்கடி கேட்டார்.
குசும் காந்தியடிகளின் இந்த பாடல்களை காஷ்மீர் பொது மக்களுக்கு முன் கொண்டு வர விரும்பினார். இறுதியாக, காந்தி ஜெயந்தியின் சந்தர்ப்பத்தில், காஷ்மீரின் இந்த மகளின் கனவு நனவாகியது. இந்த பஜனில், 'வாதி ஏ காஷ்மீரில்', அதாவது காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதற்கான விருப்பமும் பரஸ்பர சகோதரத்துவத்தின் ஆசீர்வாதமும் உள்ளது.
காந்தியடிகள் பல உன்னத கோட்பாடுகளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளார். அவர் காட்டியுள்ள வழிகாட்டுதல்கள் இன்றும் அனைவருக்கும் பொருத்தமாய் இருக்கும். காந்தியடிகளின் பிறந்த நாளன்று மட்டும் அவரைப் பற்றி நினைக்காமல், நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அவரது போதனைகளைக் கொஞ்சம் புகட்டிப் பார்த்தால், நாமும் நம் வாழ்க்கையில் பல உச்சிகளைத் தொட முடியும், சமூகத்தை சீர்திருத்த முடியும், நாட்டை உலகளவில் முதன்மையான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பது உறுதி.
ALSO READ: COVID Test-க்கு போன குட்டி காந்தி: இணையத்தில் இதயங்களை வெல்லும் சிறுவனின் படங்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR